News March 19, 2025
முகவரி சான்று இல்லாதவர்களுக்கு அரிய வாய்ப்பு

குமரி மாவட்டத்தில் அஞ்சல் துறை மூலம் அடையாள அட்டை பெறும் வசதி அஞ்சல் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. அஞ்சலக அடையாள அட்டையில் விண்ணப்பதாரரின் பெயர் முகவரி மற்றும் புகைப்படம் ஆகியவை இடம் பெற்றிருக்கும். அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் இந்த அடையாள அட்டையை பெற முடியும். இதற்கான விண்ணப்பத்தினை ரூ.20 செலுத்தி அனைத்து அஞ்சலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என்று குமரி அஞ்சல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 28, 2025
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கலக்டர் வாழ்த்து

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை 28.3.2025 முதல் 15.04.2025 வரை நடைபெற உள்ளது. மாவட்டத்தில் 22,022 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். தேர்வு நடைபெறும் மையங்களில் சிறப்பான முறையில் அனைத்து மாணவர்களும் தேர்வை தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும், படித்ததை நினைவுடன் எழுத கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
News March 27, 2025
நாகர்கோவில் – குருவாயூர் இடையே ரயில் நாளை ரத்து

நெய்யாற்றின் கரை பாறசாலை இடையே பாலம் வேலை நடைபெறுவதால் நாளை சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் ரயில் நாகர்கோவில் டவுன் குருவாயூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. 29ஆம் தேதி குருவாயூர் – நாகர்கோவில் டவுன் இந்த ரெயில் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை செல்லும் என்று ரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 27, 2025
ரப்பர் கன்றுகள் மானியம் பெற விவசாயிகளுக்கு அறிவுரை!

குமரி மாவட்ட ரப்பர் வாரிய அலுவலர் முரளி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குமரி மாவட்டத்தில் ரப்பர் நாற்றங்கால் பண்ணை வைத்திருக்கும் தனியார்கள் ரப்பர் வாரியத்திடம் பதிவு செய்து முறையான அங்கீகாரம் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார். ரப்பர் மரக்கன்றுகள் மானியம்பெற விரும்பும் விவசாயிகள் வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற தனியார் நாற்றங்கால் பண்ணைகளில் மட்டும் கன்றுகளை வாங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.