News March 19, 2025
சென்செக்ஸ் 148 புள்ளிகள் உயர்வு

இந்தியப் பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் தொடர்ந்து 3 வது நாளாக ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 148 புள்ளிகள் உயர்ந்து 75,449 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 73 புள்ளிகள் அதிகரித்து 22,907 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவடைந்து. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 31 பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகியுள்ளது.
Similar News
News July 9, 2025
எங்கள் விமானங்கள் பாதுகாப்பானவை: ஏர் இந்தியா

அண்மையில் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான தங்களின் போயிங் 787 டிரீம்லைனர் மாடல் விமானங்கள் பாதுகாப்பானவை தான் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குழு முன்பாக ஏர் இந்தியாவின் பிரதிநிதிகள் இதை தெரிவித்தனர். இந்த வகை விமானங்கள் ஆயிரக்கணக்கான முறை பாதுகாப்பான சேவை அளித்துள்ளதாக தெரிவித்த அவர்கள், அலுவல்பூர்வமான விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
News July 9, 2025
நாளை பாரத் பந்த்: இதெல்லாம் பாதிக்கப்படலாம்

நாளை நடைபெற உள்ள வேலைநிறுத்தத்தால் பின்வரும் சேவைகள் பாதிக்கப்படலாம்: *பொதுத்துறை வங்கிகள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் *தபால்துறை சேவைகள் *சுரங்கங்கள் & தொழிற்சாலைகள் *சில மாநிலங்களில் போக்குவரத்து சேவைகள் *நெடுஞ்சாலை பணிகள் *சில அரசுத்துறை அலுவலகங்கள். அதேநேரம், ஹாஸ்பிடல்கள், பார்மஸிகள், அவசர சேவைகள், விமானம் & மெட்ரோ ரயில் சேவைகள், தனியார் அலுவலகங்கள் & கடைகள், பள்ளிகள் & கல்லூரிகள் செயல்படும்.
News July 9, 2025
நள்ளிரவு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: IMD

தமிழகத்தில் நள்ளிரவு ஒரு மணிவரை 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடுமாம். உங்கள் ஊரில் மழை பெய்யுதா?