News March 19, 2025
முன்னாள் எம்பி உதவியாளர் கொலை வழக்கில் 3 பேர் கைது

திமுக முன்னாள் எம்பி குப்புசாமியின் உதவியாளராக இருந்த குமார் (72) கடந்த 16ஆம் தேதி தாம்பரம் செல்லும் போது மாயமானார். இதுகுறித்து தாம்பரம் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை விசாரணை மேற்கொண்டது. அதில், ரியல் எஸ்டேட் தொடர்பான விரோதம் காரணமாக ரவி என்பவர் தனது கூட்டாளிகளுடன் குமாரை கொலை செய்து, செஞ்சியில் புதைத்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, போலீசார் ரவி உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.
Similar News
News September 29, 2025
செங்கல்பட்டு: கரண்ட் பில் அதிகமா வருதா?

செங்கல்பட்டு மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
News September 29, 2025
செங்கல்பட்டு: DIPLOMA, B.E முடித்தவர்கள் கவனத்திற்கு!

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் 1 வருட தொழிற்பயிற்சிக்கு விண்ணபிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது . 2021 முதல் 2025 ஆண்டுகளில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் துறைகளில் டிப்ளமோ,டிகிரி முடித்தவர்கள் <
News September 29, 2025
செங்கல்பட்டு: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

செங்கல்பட்டு மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mparivahan என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க