News March 19, 2025
தமிழகத்தில் இறக்கிவிடப்பட்ட கேரள நாய்கள்!

இறைச்சி மற்றும் மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டியது போதாதென்று, தற்போது மீண்டும் ஒரு அராஜகத்தில் கேரளா ஈடுபட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் பிடிபட்ட 20 தெரு நாய்களை, அங்குள்ள மாநகராட்சி ஊழியர்கள், கன்னியாகுமரி எல்லையில் உள்ள கடச்சல் பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். இதனை கவனித்த பொதுமக்கள், அவர்களை போலீஸில் ஒப்படைத்த நிலையில், தெரு நாய்களை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
Similar News
News September 19, 2025
ரோபோ சங்கரின் மகிழ்ச்சியான தருணங்கள்!

அனைவரையும் சிரிக்க வைத்த ஒரு உன்னத கலைஞனை இழந்திருக்கிறது தமிழ் திரையுலகம். மறைந்த ரோபோ சங்கரின் பழைய போட்டோஸ் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. குடும்பத்தினருடன் அவர் இருந்தது, ஆரம்ப காலத்தில் மேடை நிகழ்ச்சிகளில் கலக்கியது உள்ளிட்ட போட்டோஸை நெட்டிசன்கள் பகிர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலே இருக்கும் படங்களை நீங்களும் ஸ்வைப் செய்து பாருங்கள்.
News September 19, 2025
உழவர்களுக்கு துரோகம் இழைக்கும் திமுக: அன்புமணி

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்காமல் திமுக அரசு துரோகம் செய்வதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 9 மாதங்களாகியும் இழப்பீடு வழங்கப்படவில்லை எனவும் ஏக்கருக்கு அறிவித்த ₹6,800 இழப்பீடு தொகை போதாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறைந்தது ஏக்கருக்கு ₹30,000 வழங்க அரசு தவறினால் போராட்டம் நடத்துவேன் என்று அன்புமணி எச்சரித்துள்ளார்.
News September 19, 2025
சூப்பர் 4 சுற்றில் இந்தியா யாருடன் மோதுகிறது?

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா விளையாடும் போட்டிகளின் விவரம் வெளியாகியுள்ளது. குரூப் A-ல் முதலிடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா, வரும் 21-ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அதன் பிறகு 24-ம் தேதி வங்கதேசத்துடனும், 26-ம் தேதி இலங்கையுடனும் இந்தியா மோதுகிறது. சூப்பர் 4 சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 28-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.