News April 1, 2024
காங்கிரஸ் வழக்கில் I.T. உறுதி

காங்கிரசிடம் ரூ.1,700 கோடி வரி நிலுவையை பெற கடும் நடவடிக்கை எதுவும் தேர்தல் காலத்தில் எடுக்க மாட்டோம் என I.T. தெரிவித்துள்ளது. I.T. அனுப்பிய நோட்டீசை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது I.T. தரப்பில், “தேர்தலின்போது யாருக்கும் பிரச்னை ஏற்படுத்த விரும்பவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, விசாரணையை ஜூலைக்கு ஒத்திவைத்தார்.
Similar News
News October 31, 2025
ஆப்கனுக்கு இந்தியா முழு ஆதரவு

பாக்., – ஆப்கன் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. ஆரம்பம் முதலே ஆப்கனுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், ஆப்கனின் இறையாண்மை, சுதந்திரம் & ஒருமைப்பாட்டுக்கு முழுமையாக ஆதரவளிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாக்., தூண்டி விடுவதை இந்தியா உள்பட எந்த அண்டை நாடுகளும் ஏற்காது என்றும் கூறியுள்ளது.
News October 31, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 31, ஐப்பசி 14 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: தசமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை
News October 31, 2025
கார்த்திகாவுக்கு பைசன் படக்குழு அளித்த வெகுமதி

ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அந்த வகையில், இயக்குநர் மாரி செல்வராஜ், கார்த்திகாவை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். அப்போது, கார்த்திகாவுக்கு ₹5 லட்சத்தையும், கண்ணகி நகர் கபடி குழுவுக்கு ₹5 லட்சம் என மொத்தம் ₹10 லட்சத்தை ‘பைசன்’ படக்குழு சார்பாக மாரி அளித்தார்.


