News March 19, 2025

பெட்ரோல், டீசல் வாகனங்கள் படிப்படியாக மாற்றம்

image

இன்று சென்னை மாநகராட்சியின் நிதி நிலை அறிக்கை ரிப்பன் கட்டிட வளாகத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் சென்னை மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்தப்படும் டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களினால் ஏற்படும் காற்று மாசை குறைக்கும் வகையில் அவை அனைத்தும் படிப்படியாக இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) மற்றும் மின்சாரம் மூலம் இயங்கும் வகையில் மாற்றம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

Similar News

News March 20, 2025

சென்னை திரிசூலத்தில் சோழர் கால கோயில்

image

சென்னை திரிசூலத்தில், 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்து திரிசூலநாதர் திருக்கோயில்கோயில் உள்ளது. இக்கோயில் தேவாரத்தில் வைப்புத்தலமாக பாடப்பட்டுள்ளது. மலைகள் சூழ்ந்த பகுதியில் அருள்பாலிப்பதால் திரிசூலநாதர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு வந்து வழிபட்டால் ராகு கேது தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தவிர பிணி, திருமணத்தடை நீங்க இங்கு வழிபடுகிரார்கள். ஷேர் பண்ணுங்க.

News March 20, 2025

சென்னை காவல்துறையில் மாற்றம் 

image

தமிழ்நாடு அரசு மூன்று உயர்மட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையராக ப்ரவேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக லக்‌ஷ்மி, காவல்துறை தலைமையக ஐ.ஜி.யாக நரேந்திரன் நாயர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News March 20, 2025

கள்ளச்சந்தையில் IPL டிக்கெட் விற்பனை

image

சென்னையில் நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கான ரூ.1,700 மதிப்பிலான டிக்கெட் ரூ.8,000 வரையிலும், ரூ.3,500 டிக்கெட் ரூ.18,000க்கும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். CSK – MI போட்டிக்கான டிக்கெட் விற்பனை 1 மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்தது. இதனால், பலரும் டிக்கெட்டுகளை வாங்கி கள்ளச்சந்தையில் விற்பதாக புகார் எழுந்துள்ளது.

error: Content is protected !!