News March 19, 2025
கரும்பு டன்னுக்கு ₹4,000 உதவித்தொகை: அரசு அறிவிப்பு

வரும் ஆண்டில் இருந்து ஒரு டன் கரும்புக்கு ₹4,000 வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். கரும்பு ஊக்கத்தொகை குறித்த அதிமுக எம்.எல்.ஏ. விஜயபாஸ்கர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும், நிலுவையில் இல்லாமல் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 19, 2025
பிரேசில் பாஸ்கட்பால் ஜாம்பவான் காலமானார்

பிரேசில் நாட்டின் பாஸ்கட்பால் ஜாம்பவான்களில் ஒருவரான லாமிர் மார்கிஸ் (87) காலமானார். 1959, 1963ஆம் ஆண்டுகளில் உலகக்கோப்பை பாஸ்கட்பால் சாம்பியன் பட்டத்தை பிரேசில் அணி வென்றபோது, அந்த அணிகளில் மார்கிஸ் இடம்பெற்றிருந்தார். மேலும், 1960, 1964ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பிரேசில் நாடு வெண்கலம் வென்றபோதும் அந்த அணிகளில் அவர் இருந்தார்.
News March 19, 2025
PF பணத்தை முழுவதும் எடுக்க முடியுமா?

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கில் உள்ள பணம் முழுவதையும் ஓய்வு பெற்றதும் ஒரே முறையில் எடுத்து விட முடியும். அதுவரை பகுதியளவிலேயே பணத்தை எடுக்க முடியும். PF கணக்கு வைத்திருப்போர், ஒரு மாதம் வேலையில்லாமல் இருந்து அவரின் கணக்கில் பணம் செலுத்தப்படாது போகுமாயின் ஆன்லைன் அல்லது நேரில் விண்ணப்பித்து 75% பணத்தை எடுக்கலாம். எஞ்சிய தொகையை 2 மாதங்களுக்கு பிறகு எடுக்கலாம்.
News March 19, 2025
அன்புமணி கேள்விக்கு மத்திய அரசு ‘ஷாக்’ பதில்

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாமக வலியுறுத்தி வரும் நிலையில், கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதா என அன்புமணி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய நிலையில், அவ்வாறு எந்த கோரிக்கையும் வரவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.