News March 19, 2025

கோடை வெயில்- பொதுமக்களுக்கு சேலம் ஆட்சியர் வேண்டுகோள்

image

பொதுமக்கள் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள அதிக அளவிலான நீர் பருக வேண்டும், சூடான பானங்கள் மற்றும் குளிர்பானங்கள் பருகுவதைத் தவிர்த்து அதிக அளவில் மோர், இளநீர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசிக் கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றைப் பருக வேண்டும். மேலும் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு சேலம் ஆட்சியர் பிருந்தாதேவி வேண்டுகோள்

Similar News

News March 19, 2025

சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு

image

சேலம் வழியாக செல்லும் கோவை-திருப்பதி-கோவை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் (22616/22615) LHB பெட்டிகள் இணைக்கப்படும் என்றும், இந்த புதிய நடைமுறை வரும் மார்ச் 22- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 19, 2025

டேங்கர் லாரி மோதி வைக்கோல் லாரி கவிழ்ந்து விபத்து

image

சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருப்பூர் கரும்பாலை மேம்பாலத்தில் பெட்ரோல் டேங்கர் லாரி மோதியதில் வைக்கோல் ஏற்றிக் கொண்டு சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் மினி லாரி ஓட்டுநர் காயத்துடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து காரணமாக, நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. 

News March 19, 2025

3 கொலையாளிகள் சுட்டுப் பிடிப்பு

image

ஈரோடு மாவட்டம், நசியனூர் அருகே சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி ஜான் இன்று கொலை செய்யப்பட்ட நிலையில், அதில் தொடர்புடைய 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். சதீஷ், சரவணன், பூபாலன் ஆகிய 3 பேர் போலீசாரை தாக்கிவிட்டுத் தப்ப முயன்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. மற்றொரு கொலையாளி கார்த்திகேயன் கையில் காயத்துடன் பிடிபட்டுள்ளார்.

error: Content is protected !!