News March 19, 2025

கோவை: Graphic Designer ஆக ஆசயைா?

image

கோவை மாநகராட்சி சார்பில் நேற்று செய்தி குறிப்பை வெளியிட்டனர். இதில் இலவச கிராஃபிக் வடிவமைப்பு மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி மார்ச்.20 முதல் தொடங்குகிறது. இப்பயிற்சி ஒரு மாத காலம் நடைபெறும். தொழில்வாய்ப்பு திறன்களை வளர்க்கும் இப்பயிற்சியில் தொழில் முனைவோர், மாணவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் சேரலாம். மேலும், விருப்பமுள்ளவர்கள் 63858- 37858 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். (Share பண்ணுங்க)

Similar News

News March 19, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (மார்ச் 19) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

News March 19, 2025

11 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு அழைப்பு

image

இந்திய ராணுவத்தில் அக்னிவீரராக சேர இந்திய ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது. ஆட்சேர்ப்புக்கு கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள இளைஞர்கள் மார்ச்.12 முதல் ஏப்ரல்.10ம் தேதி வரை www.joinindianarmy.nic.in என்ற இணைதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 19, 2025

கோவையில் ஆசிரியர் எரித்து கொலையா?

image

கோவை மதுக்கரை நாச்சிபாளையம் பகுதியில் இன்று காலை பெண்ணின் உடல் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளது. இதுகுறித்து விரைந்து சென்ற மதுக்கரை போலீசார் சடலத்தை மீட்டு கோவை ஜிஎச் அனுப்பி வைத்தனர். மேலும், விசாரித்ததில் இறந்தவர் வழுக்குப்பாறை அரசு பள்ளியில் 10ம் வகுப்பு ஆசிரியராக பணிபுரியும் பத்மா என்பது தெரிந்தது. தொடர்ந்து அவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!