News March 19, 2025
வீடு வீடாக ரேஷன் விநியோகம் குறித்து ஆய்வு: சக்கரபாணி

வீடு வீடாக சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்வது குறித்து ஆய்வு செய்யப்படும் என சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஆந்திரா, கர்நாடகாவில் உள்ளதுபோல், தமிழகத்திலும் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்குவது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இது குறித்து உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க..
Similar News
News March 19, 2025
கோலிக்கு பதிலடி கொடுத்த பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் குடும்பத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விராட் கோலி அண்மையில் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள பிசிசிஐ செயலாளர் சாக்கியா, சிலர் கோபப்படுவதற்காக பிசிசிஐ விதிகள் மாற்றப்படாது எனக் கூறினார். முன்னதாக, வெளிநாடுகளில் விளையாட செல்லும் இந்திய அணி வீரர்கள், தங்கள் குடும்பத்தினரை அழைத்துச் செல்லக்கூடாது என பிசிசிஐ உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
News March 19, 2025
அரசு ஊழியர்களின் Retirement.. மத்திய அரசின் விளக்கம்

தற்போது மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60ஆக உள்ளது. இதனை 62 ஆக உயர்ந்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகளால் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஓய்வு பெறும் வயதை உயர்த்தவோ, குறைக்கவோ திட்டம் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
News March 19, 2025
நண்பேன்டா.. IPLஇல் அம்பயர் யாரு தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் சிறுவயது நண்பர் தன்மாய் ஸ்ரீவஸ்தவா (46), இந்த IPLஇல் நடுவராக களமிறங்கவுள்ளார். கோலியும், ஸ்ரீவஸ்தவாவும் 2008இல் நடந்த UNDER 19 உலகக்கோப்பை போட்டியில் விளையாடியுள்ளனர். இப்போட்டியில் அதிக ஸ்கோர் எடுத்தவரே ஸ்ரீவஸ்தவாதான். ஆரம்பக்கால IPLஇல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவர், பிறகு அம்பயரிங் ஃபீல்டை தேர்ந்தெடுத்தார்.