News March 19, 2025
சங்கடங்கள் போக்கும் வாலீஸ்வரர் கோயில்

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் கோனேரி ஆற்றங்கரையில் உள்ள வாலீஸ்வரர் கோயில் சோழர் ஆட்சி காலத்தில் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளதாக தல வரலாறு தெரிவிக்கிறது. வாலி வழிபட்டதால் இது வாலீஸ்வரர், வாலாம்பிகை ஸ்தலமாக திகழ்ந்துள்ளது. பிரதோஷ காலங்களில் இங்கு சென்று வழிபட்டால் சங்கடங்கள் விலகி மனவலிமை பெறலாம் என்பது ஐதீகம் சிவ பக்தர்களுக்கு இதனை SHARE பண்ணுங்க
Similar News
News September 19, 2025
பெரம்பலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செப்டம்பர் 20ஆம் தேதி பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கலெக்டர் கூறினார்.
News September 19, 2025
பெரம்பலூர்: பட்டா, சிட்டா விபரங்களை அறிய எளிய வழி!

பெரம்பலூர் மக்களே…உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் உங்களது நில விவரம், பட்டா திருத்தம், புல எல்லை வரைபடம் உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ளலாம் அல்லது உரிய ஆவணங்களுடன் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க..
News September 19, 2025
பெரம்பலூர் வருகை தரும் அமைச்சர்

பெரம்பலூர் மாவட்டம் மங்கலம், தொண்டைபாடி, நொச்சிகுளம், அருணகிரி மங்கலம், திம்முர், கூடலூர், கொட்டரை, சாத்தனூர், கொளக்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளை துவக்கி வைத்து அடிக்கல் நாட்டி வைப்பதற்காக போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (19-09-2025) பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.