News March 19, 2025

சிம்புவுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்

image

‘STR 49’ படத்தில் நடிக்க கயாடு லோஹர் கமிட்டாகி உள்ளார். ‘டிராகன்’ பட வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், தற்போது சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த படத்தை ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் கல்லூரி மாணவனாக சிம்பு நடிக்கிறார்.

Similar News

News March 19, 2025

பெங்களூரு அணிக்கு எதிராக தொடரும் CSK ஆதிக்கம்

image

ஐபிஎல் தொடரில் CSK மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியை காண்பதற்கே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் தொடர்களில் 33 முறை நேருக்கு நேர் மோதிய நிலையில், CSK 21 போட்டிகளில் வென்றுள்ளது. பெங்களூரு அணி 11 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. பெங்களூரு அணிக்கு எதிராக CSK இந்த முறையும் வெற்று பெறுமா? கமெண்ட் பண்ணுங்க…

News March 19, 2025

தமிழகத்தில் இறக்கிவிடப்பட்ட கேரள நாய்கள்!

image

இறைச்சி மற்றும் மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டியது போதாதென்று, தற்போது மீண்டும் ஒரு அராஜகத்தில் கேரளா ஈடுபட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் பிடிபட்ட 20 தெரு நாய்களை, அங்குள்ள மாநகராட்சி ஊழியர்கள், கன்னியாகுமரி எல்லையில் உள்ள கடச்சல் பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். இதனை கவனித்த பொதுமக்கள், அவர்களை போலீஸில் ஒப்படைத்த நிலையில், தெரு நாய்களை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

News March 19, 2025

அதிமுகவுடன் நெருக்கம் காட்டும் OPS தரப்பு எம்எல்ஏக்கள்

image

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது முதல், அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட MLAக்கள், சட்டசபையில் தனியே செயல்பட்டு வந்தனர். அவர்கள் அதிமுக MLAக்களுடன் இதுவரை சபையில் பேசாத நிலையில், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இன்று அவைக்கு வந்த வைத்திலிங்கத்திடம், அதிமுக MLAக்கள் சகஜமாக பேசினார்கள். அதிமுக மீண்டும் ஒன்றிணையுமா? கமெண்ட் பண்ணுங்க…

error: Content is protected !!