News April 1, 2024
குமரியில் ஆலோசனை கூட்டம்

கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக பசிலியான் நசரேத் போட்டியிடுகிறார். இவரின் வெற்றிக்காக குமரி மாவட்ட அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் அதிமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் மாநகர வடக்கு மண்டல செயலாளர் மாநகராட்சி உறுப்பினர் ஸ்ரீலிஜா தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Similar News
News April 13, 2025
இராமநாதபுரம்: திடீர் மின்தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 94987 94987 என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.SHARE
News April 13, 2025
மீன்பிடித் தடைக்காலம் இன்று முதல் அமலுக்கு வருகிறது

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடித் தடைக்காலம் இன்று முதல் அமலாகிறது. ஆண்டு தோறும் மீன்கள் இனப்பெருக்க காலம் கடைபிடிக்கப்படும். மீன்கள் இனப்பெருக்க காலத்தையொட்டி, தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் விசைப்படகுகள் மீன்பிடித் தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமலாகிறது. ஜூன் 14 வரை மொத்தம் 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் இருக்கும்.
News April 13, 2025
கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

அஞ்சுகிராமம், ரஸ்தாகாடு கடற்கரை உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று கடலில் குளிப்பதற்காக கன்னங்குளம் பகுதியைச் சேர்ந்த 3 மாணவர்கள் சென்றுள்ளனர். இதில் கல்லூரி மாணவர் ஒருவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். உடன் சென்ற 2 பள்ளி மாணவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கடலோர பாதுகாப்பு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.