News March 19, 2025
4 நாள்கள் தொடர் விடுமுறை!

இம்மாத இறுதியில் 4 நாள்கள் தொடர் விடுமுறை வரவுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மார்ச் 29 (சனிக்கிழமை), மார்ச் 30 (ஞாயிற்றுக்கிழமை), மார்ச் 31 ரம்ஜான் பண்டிகை (திங்கட்கிழமை), ஏப்ரல் 1 வங்கிக் கணக்கு முடிவு நாள் அரசு பொது விடுமுறை நாளாகும். இதனால், இப்போதே சோஷியல் மீடியாவில் இது குறித்த மீம்ஸ்கள் டிரெண்டாகத் தொடங்கியுள்ளன. இந்த விடுமுறையில் உங்க பிளான் என்ன?
Similar News
News September 20, 2025
ஈரானில் அதிக சம்பளத்தில் வேலையா? உஷாரா இருங்க

ஈரான் அல்லது வெளிநாடுகளில் அதிக சம்பளத்தில் வேலை, விசாவும் தேவையில்லை என ஏஜெண்டுகள் தொடர்பு கொண்டால் எச்சரிக்கையாக இருக்கும்படி இந்திய அரசு அலர்ட் கொடுத்துள்ளது. இப்படி அழைத்து செல்லப்படும் இந்தியர்கள், ஈரானில் இறங்கியதும், கிரிமினல் கேங்குகளால் கடத்தப்பட்டு, பணம் கொடுத்தால் தான் விடுவிப்பேன் என குடும்பத்தாரிடம் மிரட்டும் சம்பவங்கள் நடப்பதாகவும் அரசு எச்சரித்துள்ளது.
News September 20, 2025
தனுராசனம் செய்வது எப்படி ?

தனுராசனம் செய்வதால், வயிற்று கொழுப்பு கரைவதுடன், உடல் வலுப்பெறும்.
*தரையில் குப்புற கைகள் & கால்களை நீட்டி படுக்கவும் *மெதுவாக கால்களை மடக்கி, முதுகுக்கு மேலே கொண்டு வரவும் *தலை & நெஞ்சுப்பகுதியை மேலே உயர்த்தி, இரு கைகளையும் பின்னோக்கி எடுத்து சென்று, பாதங்களை பிடித்து கொள்ளுங்கள் *வயிற்றுப்பகுதி தரையில் அழுந்தி இருக்க உடல் வில் போல் வளைய வேண்டும். SHARE IT.
News September 20, 2025
இன்று SUPER 4 சுற்று தொடக்கம்: SL vs BAN வெல்வது யார்?

ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்று இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் இலங்கை vs வங்கதேச அணிகள் மோதுகின்றன. வழக்கம் போல் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. முன்னதாக, இந்த தொடரின் லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை, இலங்கை வென்றிருந்தது. அதேபோல், ஆஃப்கனையும் வீழ்த்தி, இந்த சுற்றுக்கு தகுதிபெற வங்கதேச அணிக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.