News March 19, 2025
KKR vs LSG போட்டி மாற்றம்.. ஏன் தெரியுமா?

கொல்கத்தாவில் வரும் ஏப்.6ஆம் தேதி நடைபெற இருந்த KKR vs LSG ஐபிஎல் லீக் போட்டி மாற்றப்பட உள்ளது. அன்று ராமநவமி என்பதால், பாஜக சார்பில் 20,000 ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன. எனவே, போலீசாரால் போதிய பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறியதால், போட்டி மாற்றியமைக்கப்பட உள்ளதாகவும், இது குறித்து BCCIயிடம் தெரிவித்துவிட்டதாகவும் பெங்கால் கிரிக்கெட் அசோசியன் தலைவர் சிநேகாஷிஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
Similar News
News September 20, 2025
தமிழ்நாட்டில் ”கஞ்சா” ஆம்லேட்: EPS

திமுக ஆட்சியில் போதைப் பொருள்கள் தாரளமாக கிடைப்பதால், தமிழக இளைஞர்கள் சீரழிவதாக EPS குற்றம் சாட்டியுள்ளார். கஞ்சா சாக்லெட் வடிவத்தில் வந்துள்ளது; ஆம்லெட்டில் கூட கஞ்சாவை கலக்கி விற்கிறார்கள் என சாடிய அவர், போதைப்பொருள் அதிகரிப்பு பற்றி சட்டசபையில் பலமுறை பேசினேன். அப்போதெல்லாம் கண்டுகொள்ளாத CM, இப்போது தாமதமாக விழித்துக் கொண்டு இருக்கிறார். இப்படிப்பட்ட CM நமக்கு தேவையா என கேள்வி எழுப்பினார்.
News September 20, 2025
இவ்வளவு விலையா?

இன்றைய உலகில் விலையை எது வரையறுக்கிறது. ஆடம்பரமான உடைமைகளா? தனித்துவமான பொருள்களா ? பழைமையான வரலாற்று சிறப்புடையதா? பல்வேறு காரணிகள் உள்ளன. அந்த வகையில் மேலே, உலகில் மிகவும் விலை உயர்ந்த சிலவற்றை கொடுத்து இருக்கிறோம். அதை ஒவ்வொன்றாக பாருங்க. இதில் இல்லாத உங்களுக்கு தெரிந்த விலை உயர்ந்தவை ஏதேனும் இருந்தா கமெண்ட்ல சொல்லுங்க.
News September 20, 2025
₹1,20,000 கடன் வழங்குகிறது தமிழக அரசு.. GOOD NEWS

தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் 2 கறவை மாடுகள் (எருமை உட்பட) வாங்குவதற்காக 7% வட்டி விகிதத்தில் ₹1,20,000 வரை கடனுதவி வழங்கப்படுவதாக TN அரசு அறிவித்துள்ளது. கறவை மாடு ஒன்றுக்கு ₹60,000 கடன் வழங்கப்படும். திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள். சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ் சமர்பித்தால், கடன் (குடும்பத்தில் ஒருவருக்கு ) வழங்கப்படும்.