News March 19, 2025

பிரபல இசையமைப்பாளர் ஆரேலியோ மார்டினெஸ் பலி

image

மத்திய அமெரிக்காவின் ரோட்டன் தீவில் நிகழ்ந்த <<15809134>>விமான விபத்தில்<<>> பிரபல இசையமைப்பாளர் ஆரேலியா மார்டினெஸ் (55) உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கறுப்பினத்தில் பிறந்து கரிஃபுனா(Garifuna) இசைக் குழுவில் இணைந்து சர்வதேச அங்கீகாரத்தை பெற்ற மார்டினெஸ், அந்நாட்டின் காங்கிரஸ் கட்சியில் முக்கிய முகமாக இருந்தவர். மார்டினெஸ் மறைவுக்கு ஹோண்டுரான் ஜனாதிபதி சியோமாரா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 19, 2025

அதிமுகவுடன் நெருக்கம் காட்டும் OPS தரப்பு எம்எல்ஏக்கள்

image

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது முதல், அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட MLAக்கள், சட்டசபையில் தனியே செயல்பட்டு வந்தனர். அவர்கள் அதிமுக MLAக்களுடன் இதுவரை சபையில் பேசாத நிலையில், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இன்று அவைக்கு வந்த வைத்திலிங்கத்திடம், அதிமுக MLAக்கள் சகஜமாக பேசினார்கள். அதிமுக மீண்டும் ஒன்றிணையுமா? கமெண்ட் பண்ணுங்க…

News March 19, 2025

193 பேர் மீது ED வழக்கு: 2 பேருக்கு மட்டுமே தண்டனை!

image

கடந்த 10 ஆண்டுகளில் 193 அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கேரளாவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. ரஹீம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, பதிவு செய்யப்பட்ட 193 வழக்குகளில் இரண்டில் மட்டுமே தண்டனை கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், மற்ற வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 19, 2025

மீண்டும் திரைக்கு வரும் ‘பகவதி’

image

ஆக்‌ஷன் ஹீரோவாக விஜய்யை உயர்த்தியதில் ‘பகவதி’ படத்திற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. அப்படிப்பட்ட பகவதி படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. மார்ச் 21ஆம் தேதி படம் திரைக்கு வர உள்ளதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய்யின் ‘கில்லி’ படம் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டு, வசூலில் சக்கைபோடு போட்டது குறிப்பிடத்தக்கது. ரெடியா இருங்க ரசிகர்களே!

error: Content is protected !!