News March 19, 2025

திருப்பத்தூர் அருகே குளு குளு பகுதி

image

திருப்பத்தூர் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள அழகிய மலைவாசஸ்தலமான ஏலகிரி, ஆண்டு முழுவதும் இதமான வானிலையை வழங்குகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் ஏலகிரியில், ட்ரெக்கிங் மற்றும் பாராகிளைடிங் செல்லலாம். அது மட்டுமின்றி ஏலகிரி ஏரியில் போட்டிங் செய்துவிட்டு, இயற்கை பூங்கா, அட்வென்ச்சர் பார்க், முருகன் கோவில் மற்றும் பெருமாள் கோவில் ஆகியவற்றையும் பார்வையிடலாம்.

Similar News

News September 14, 2025

திருப்பத்தூர்: திருமணத்தடை நீக்கும் சிறப்பு கோயில்

image

திருப்பத்தூர் அங்கநாதேஸ்வரர் கோயில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த்து. இந்த கோயிலில், பிரதோஷம், பௌர்ணமி, கிருத்திகைதோறும் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். வியாழக்கிழமை பிரம்மோற்சவத்தின்போது, சுவாமிக்கு சாற்றப்படும் திருமண மாலை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனால், திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் செய்வதற்கு உண்டான சூழல் ஏற்படும் என்பது ஐதீகம். நீங்களும் ஒருமுறை இங்கே சென்று வழிபட்டு பாருங்கள்.

News September 14, 2025

திருப்பத்தூர்: BE/ B.Tech,B.Sc/M.Sc,CA படித்திருந்தால் 1,56,000 வரை சம்பளம்

image

மகாராஷ்டிரா வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி டேட்டா அனலிஸ்ட், ஜாவா டெவலப்பர், டேட்டா இன்ஜினியர் போன்ற பல பணிகளுக்கு BE/ B.Tech, B.Sc/M.Sc, CA டிகிரி முடித்த 22-35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் 85,000-1,56,500 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் <>இந்த லிங்கை<<>> க்ளிக் செய்து செப்-30குள் விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News September 14, 2025

திருப்பத்தூர்: ஊர்காவல்படையில் சேர எஸ்.பி அழைப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி சியாமளா தேவி வெளியிட்ட செய்தி குறிப்பில், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆண்கள் -4 பெண்கள் -2 என 6 ஊர்காவல்படை பணிகள் காலியாக உள்ளதாகவும், அதற்கு விண்ணபிக்க விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பாச்சல் பகுதியில் உள்ள ஊர்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!