News March 19, 2025

இன்று போராட்டம் நடத்தினால் சம்பளம் இல்லை: அரசு வார்னிங்

image

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால், ஊதியம் கிடையாது என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் இன்று வேலைநிறுத்தம் அறிவித்திருந்தன. இந்நிலையில், மருத்துவ விடுப்பை தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ எடுக்கக்கூடாது என்றும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டால் ஒருநாள் ஊதியம் பிடிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

Similar News

News March 19, 2025

திமுக ஆட்சிக்கு முருகன் ஆசி: சேகர்பாபு

image

திமுக ஆட்சிக்கு தமிழ் கடவுள் முருகன் முழுவதுமாக ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறார் என்று பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முருகனுக்கு மாநாடு எடுத்த ஆட்சி இந்த திமுக ஆட்சிதான் எனக் கூறிய அவர், அறநிலையத்துறை மூலம் 10 கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவித்து 4 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது; எஞ்சிய 6 கல்லூரிகள் நீதிமன்ற வழிகாட்டுதல்படி, இந்தாண்டு இறுதிக்குள் கட்டப்படும் என உறுதியளித்தார்.

News March 19, 2025

இதெல்லாம் ஸ்பேஸ்ல சாப்பிட தடை! ஏன் தெரியுமா?

image

விண்வெளியில் சில உணவு வகைகளை நாசா தடை செய்துள்ளது. *பிரட்- புவியீர்ப்பு விசை இல்லாததால் இதன் துகள்கள் பறந்து பிரச்னையை ஏற்படுத்தலாம். *ஐஸ்க்ரீம்- இதை உறைய வைக்க அதிக மின்சாரம் தேவைப்படும். *மீன்- இதன் துர்நாற்றம் நீங்க நீண்டகாலம் ஆகலாம். *உப்பு, மிளகு- இதன் துகள்களும் காற்றில் பறந்து பிரச்னையை ஏற்படுத்தலாம். *மது- விண்வெளி வீரர்கள் மது போதையில் தொழில்நுட்ப தவறிழைக்க வாய்ப்புகள் உள்ளது.

News March 19, 2025

மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் மாதம் ₹1,000

image

புதுச்சேரியில் மஞ்சள் நிற ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ஏற்கெனவே, சிவப்பு நிற கார்டுதாரர்களுக்கு மாதம் வழங்கப்பட்டு வரும் ₹1,000, இனி ₹2,500 ஆக உயர்த்தப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், வறுமைக்கோட்டிற்கு மேல் வாழும் எந்த உதவியும் பெறாத குடும்பத் தலைவிகளுக்கு ₹1,000 வழங்கப்படும் என கூறியுள்ளார்.

error: Content is protected !!