News March 19, 2025
பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

செங்கல்பட்டு அருங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் தேன்மொழி.இவர் கடந்த 11-ந்தேதி தனது நிலத்திற்கு இலவச பட்டா பெறுவதற்கு வி.ஏ.ஓ சக்குபாய் என்பவரை அணுகியுள்ளார்.ஆனால் சக்குபாய் ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார்.இது குறித்து தேன்மொழி லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார்.அதன்படி ரசாயனம் தடவிய பணத்தை பெற்ற வி.ஏ.ஓ சக்குபாய் மற்றும் உதவியாளர் சரவணன் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
Similar News
News September 14, 2025
செங்கல்பட்டு உருவான வரலாறு

தமிழ்நாடு மாநிலமாக உருவான போது 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தது. அதில் செங்கல்பட்டு மாவட்டமும் ஒன்று. பின் 1997ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 2 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 2019ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு நகரை தலைமையிடமாக கொண்டு செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. ஷேர் பண்ணுங்க!
News September 14, 2025
செங்கை: பொறியாளரா நீங்க? கை நிறைய சம்பளத்தில் வேலை!

மத்திய அரசு நிறுவனமான இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள ஆசோசியேட் இன்ஜினியர் கிரேடு 2 & 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. கெமிக்கல், மெக்கானிக்கல், சிவீல், சுற்றுச்சூழல், தொழில்துறை மாசுபாடு குறைப்பு, எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ரூமெண்டேசன், உலோகவியல் ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் வரும் செப்.24க்குள் இந்த <
News September 14, 2025
செங்கல்பட்டு அருகே கார் மோதி இளைஞர் பலி

மறைமலைநகர் அருகே உள்ள கோகுலாபுரத்தைச் சேர்ந்தவர் லதாராம் (28). இவர் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். நேற்று இரவு பணி முடித்து விட்டு ஜி.எஸ்.டி. சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாம்பரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.