News April 1, 2024
இளையராஜாவை பாராட்டிய ராமராஜன்

மக்கள் தன்னை நினைவில் வைத்திருக்க இசையமைப்பாளர் இளையராஜாவும் ஒரு காரணம் என்று நடிகர் ராமராஜன் பாராட்டியுள்ளார். ராமராஜன் நீண்ட இடைவெளிக்கு பிறகு சாமானியன் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராமராஜன், “எனது படத்தைப் போல வேறு யார் படத்துக்கும் இளையராஜா இசையமைத்தது இல்லை. அவரது பாடல்களே என்னை வாழ வைக்கிறது” என்றார்.
Similar News
News January 23, 2026
புதுச்சேரி: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு?

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ சேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. PM-JAY செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே <
News January 23, 2026
BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு

நேற்று குறைந்த தங்கத்தின் விலை இன்று (ஜன.23) மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹450 அதிகரித்து ₹14,650-க்கும், சவரனுக்கு ₹3,600 அதிகரித்து ₹1,17,200-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வருவதால், வரும் நாள்களிலும் விலை உயரும் என கூறப்படுகிறது.
News January 23, 2026
திமுகவுக்கு எதிராக காங்கிரஸ் ரகசிய ரூல்ஸ் போட்டதா?

காங்கிரஸில் புதிதாக தேர்வாகியுள்ள மாவட்ட தலைவர்கள் திமுகவினரோடு பேசக்கூடாது என தலைமை உத்தரவிட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. பிப்.14-ல் ராகுல் தமிழகம் வரும்போதுதான் கூட்டணி இறுதியாகும். அதற்குள் திமுகவோடு இணக்கம் காட்டவேண்டாம் என்பதற்காகவே இப்படியொரு ரகசிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இருகட்சிகளுக்கு இடையே இருக்கும் புகைச்சல் மேலும் அதிகரித்திருப்பதாக பேசப்படுகிறது.


