News March 19, 2025
இருமுடி இல்லாமல் சபரிமலை செல்ல கட்டுப்பாடு

இருமுடி கட்டு இல்லாமல் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு புதிதாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இருமுடி கட்டு இல்லாத பக்தர்கள், காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது. இதன்மூலம் இருமுடி கட்டுடன் வரும் பக்தர்கள் கூடுதல் நேரம் சாமி தரிசனம் செய்ய வசதியாக இருக்கும் என தேவசம்போர்டு விளக்கமளித்துள்ளது.
Similar News
News March 19, 2025
தனியாரை விட பால் விலை ₹16 குறைவு: அமைச்சர்

பால் கொள்முதல் குறித்து பேரவையில், MLA நந்தகுமார் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், பால் விற்பனையில் தனியாரை விட ஆவின் ₹16 குறைவாக விற்பதாக கூறினார். மேலும், ஆவின் நிறுவனத்தை நட்டம் இல்லாமல் நடத்த வேண்டும் எனக்கூறிய அவர், பால் விற்பனை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆட்சியை விட தற்போது 11 லட்சம் லிட்டர் கூடுதலாக பால் கொள்முதல் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
News March 19, 2025
திமுக கொடிகளை 15 நாள்களில் அகற்றுங்கள்: துரைமுருகன்

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள DMK கொடிகளை 15 நாள்களுக்குள் அகற்றிவிட்டு விவரங்களை தலைமைக்கு அனுப்ப துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி மத ரீதியிலான அனைத்து கொடிக் கம்பங்களையும் அகற்றக் கடந்த 6ஆம் தேதி ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.
News March 19, 2025
2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு

பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் எப்போது வழங்கப்படும் என பேரவையில், MLA சேகர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக ஆட்சி அமைந்த பிறகு பதிவு செய்து காத்திருந்த 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், மீதமுள்ள விவசாயிகளுக்கு CMன் அனுமதி பெற்று முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்படும் என்றார்.