News March 19, 2025
மார்ச் 19: வரலாற்றில் இன்று!

*1915 – புளூட்டோவின் புகைப்படம் முதல்முறையாக எடுக்கப்பட்டது.
*1944 – 2ஆம் உலகப் போர்: நாசி ஜெர்மனிப் படைகள் ஹங்கேரியைக் கைப்பற்றின.
*1962 – அல்ஜீரியா விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.
1972 – இந்தியாவும் வங்கதேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
*1988 – இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். ஏப்ரல் 19இல் இறந்தார்.
Similar News
News March 19, 2025
பதவிக்கு நெருக்கடி.. டெல்லி சென்ற செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி இரவோடு இரவாக டெல்லி சென்று திரும்பி இருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்ற அவர், சற்றுமுன் சென்னை திரும்பினார். டாஸ்மாக்கில் ₹1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக EDயின் புகாரை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், அவர் டெல்லி சென்றதாகத் தெரிகிறது.
News March 19, 2025
சிம்புவுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்

‘STR 49’ படத்தில் நடிக்க கயாடு லோஹர் கமிட்டாகி உள்ளார். ‘டிராகன்’ பட வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், தற்போது சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த படத்தை ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் கல்லூரி மாணவனாக சிம்பு நடிக்கிறார்.
News March 19, 2025
தங்கம் விலை சவரனுக்கு மேலும் ₹320 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 19) சவரனுக்கு ₹320 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,290க்கும், சவரன் ₹66,320க்கும் விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ₹320 உயர்ந்த நிலையில், இன்றும் விலை உயர்வை சந்தித்துள்ளது. அதேபோல், வெள்ளி கிராமுக்கு ₹1 உயர்ந்து புதிய உச்சமாக ஒரு கிராம் ₹114க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,14,000க்கும் விற்பனையாகிறது.