News March 19, 2025
மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்ய BJP முயற்சி: சேகர்பாபு

மதத்தை வைத்து அரசியல் செய்ய நினைத்தவர்களுக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் கோயில்களில் 2 பக்தர்கள் உடல்நலக் குறைவு காரணமாகவே உயிரிழந்ததாகவும், அதை திசைத் திருப்ப அண்ணாமலை போன்றோர் முயல்வதாகவும் அவர் சாடியுள்ளார். கூட்ட நெரிசலில் உயிரிழந்ததாக இந்து சமய அறநிலையத்துறை மீது பாஜகவினர் களங்கம் கற்பிப்பதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News July 10, 2025
போலீஸ் ஸ்டேஷன் மரணங்கள்: விஜய் பலே திட்டம்

சமீபத்தில் லாக்-அப் டெத்தில் உயிரிழந்த காவலாளி அஜித்குமாரின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் தெரிவித்த விஜய், அவரது குடும்பத்தினருக்கு நிதியுதவியும் செய்தார். இந்நிலையில், கடந்த நான்காண்டு கால திமுக ஆட்சியில் போலீஸ் ஸ்டேஷனில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 தேர்தல் களம் 4 முனைப்போட்டியாக உள்ள நிலையில், தவெகவின் நகர்வுகள் வேகமெடுக்கிறது.
News July 10, 2025
போர் தொழில் பழகும் தனுஷ்!

‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வேல்ஸ் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிப்பில், தனுஷ் நடிக்கும் ‘D54’ படத்தின் அறிவிப்பு வெளிவந்துள்ளது. நிலப்பரப்பு ஒன்று எரிந்துக் கொண்டிருக்க, தனுஷ் வருத்தத்துடன் நிற்கும் படியான போஸ்டருக்கு ‘Sometimes staying dangerous is the only way to stay alive’ என கேப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
News July 10, 2025
நாடு முழுவதும் SIR நடைபெறும்: ECI விளக்கம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (Special Intensive Revision- SIR) நாடு முழுவதும் நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டில் ECI அறிவித்துள்ளது. பிஹாரில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தம் இப்போது நடத்தப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவின் விசாரணையில் ECI இதை தெரிவித்தது. பிஹாரில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இந்த சரிபார்ப்பு செயல்முறை நடத்தப்படும் அது விளக்கம் அளித்துள்ளது.