News March 18, 2025
புதுவை: மருத்துவமனையில் இளைஞர் உயிரிழப்பு உறவினர்கள் சாலை மறியல்

புதுச்சேரி அறுபடை வீடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு. மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள் இன்று 18-3-25 இரவு 8 மணியளவில் கடந்த 2 மணி நேரமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக புதுச்சேரி – கடலூர் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.. இருபுறமும் வாகனங்கள் நீண்ட தொலைவு நிற்கின்றன.
Similar News
News August 10, 2025
புதுச்சேரி மக்களின் கவனத்திற்கு ?

புதுச்சேரியில் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News August 10, 2025
புதுவை: மனநிம்மதியை தரும் எகிப்திய நடராஜர்

புதுச்சேரியில் உள்ள புதுக்குப்பம் கடற்கரையில் அமைந்துள்ள கர்ணேஷ்வர் நடராஜர் கோயில், பிரமிடு வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இது எகிப்திய பிரமிடுகள் மற்றும் இந்தியாவின் பாரம்பரிய கோயில் பாணியின் கலவையாக காட்சியளிக்கிறது. இக்கோயிலில் இருக்கும் ஏழு படிகள் உணர்தலைக் குறிப்பதாக கூறுகின்றனர். இக்கோவிலுக்கு சென்று வழிபட்டால் மனநிம்மதி கிடைக்கும் என நம்பபடுகிறது. இதனை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.
News August 10, 2025
எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு வினாடி வினா

புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், பள்ளிக்கல்வி துறை இணைந்து பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு வினாடி வினா போட்டியை நடத்தினர். புதுச்சேரியில் நடந்த போட்டியை, திட்ட இயக்குனர் அருள்விசாகன், பள்ளிக் கல்வி துறை முதன்மை கல்வி அலுவலர் குலசேகரன் துவக்கி வைத்தனர். இதில் அமலோற்பவம் லுார்து அகாடெமி குழு மாணவர்கள் ஸ்ரீராம், சதீஷ்குமார் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.