News March 18, 2025
இந்தியா, பாகிஸ்தான் ராணுவம் உருவான கதை (2/2)

கூர்க்கா படையை சரிபாதியாக இந்தியாவும், பிரிட்டனும் தங்களுக்குள் பிரித்து கொண்டன. பிரிட்டிஷ் விமானப்படையில் இருந்த 10,000 பேர் இந்திய விமானப்படையிலும், 3,000 பேர் பாகிஸ்தான் விமானப்படையிலும், பிரிட்டிஷ் கடற்படையில் இருந்த 8,700 பேரில் 5,700 பேர் இந்திய கடற்படையிலும், எஞ்சிய 3,000 பேர் பாகிஸ்தான் கடற்படையிலும் இணைந்தனர். இவை அனைத்தும் பிரிட்டிஷ் ராணுவம் மேற்பார்வையில் நடந்து முடிந்தது.
Similar News
News September 21, 2025
பாஜகவை தடுக்கும் ஆற்றல் திமுகவிடமே உள்ளது: ஸ்டாலின்

பாஜகவை எதிர்ப்பதாக வெளியில் பலர் சொல்லலாம், ஆனால் கொள்கை தெளிவுடன் பாஜகவை தடுக்கும் ஆற்றல் திமுகவிடமே உள்ளது என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலியில் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், திமுக ஆட்சி நீடித்தால் தான் தமிழகம் தொடர்ந்து தலைநிமிர்ந்து நடக்க முடியும் என்றார். ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ள தங்களுக்கு இன்னும் நிறைய பணிகள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
News September 21, 2025
BREAKING: மழை வெளுத்து வாங்கும்

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, ராணிபேட்டை, திருவள்ளூர், தி.மலை, விழுப்புரம், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூரில் இடி, மின்னலுடன் மழையும், கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விழுப்புரம், நெல்லை, குமரியில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
News September 21, 2025
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க இந்த மூலிகை தேநீர் குடிங்க!

கிராம்பு டீ குடிப்பதால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, சுவாசக் கோளாறுகள் நீங்கும் என சித்த மருத்துவத்தில் கூறப்படுகிறது. பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை ஊற்றி, அதில் 2 அல்லது 3 கிராம்புகளைச் சேர்த்து கொதிக்க விடுங்கள் *இந்த தண்ணீர் ஒரு கப் அளவுக்கு வற்றி வரும் வரை கொதிக்க விடவும் *பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, சிறிது நேரம் ஆற விடுங்கள் *ஆறியதும், சுவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம்.