News March 18, 2025
டிராகன் VS NEEK… ஓடிடியிலும் தொடரும் யுத்தம்!

பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படமும், தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (NEEK) படமும் பிப். 21-ல் திரையரங்குகளில் வெளியாகின. டிராகன் படம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், NEEK படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்தது. இந்நிலையில், மார்ச் 21 அன்று நெட்பிளிக்ஸில் டிராகன் படம் வெளியாகும் அதே நாளில் NEEK படம் அமேசானில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உங்க ஃபேவரைட் படம் எது?
Similar News
News September 21, 2025
தமிழக முதல்வரிடம் பரிசு பெற்ற மூலனூர் பள்ளி மாணவி

12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100/100 மதிப்பெண்கள்பெற்ற மூலனூர் பாரதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவி A.அனுவர்ஷினி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ரூ.10,000 பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழும் பெற்றார்.
News September 21, 2025
பாஜகவை தடுக்கும் ஆற்றல் திமுகவிடமே உள்ளது: ஸ்டாலின்

பாஜகவை எதிர்ப்பதாக வெளியில் பலர் சொல்லலாம், ஆனால் கொள்கை தெளிவுடன் பாஜகவை தடுக்கும் ஆற்றல் திமுகவிடமே உள்ளது என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலியில் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், திமுக ஆட்சி நீடித்தால் தான் தமிழகம் தொடர்ந்து தலைநிமிர்ந்து நடக்க முடியும் என்றார். ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ள தங்களுக்கு இன்னும் நிறைய பணிகள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
News September 21, 2025
BREAKING: மழை வெளுத்து வாங்கும்

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, ராணிபேட்டை, திருவள்ளூர், தி.மலை, விழுப்புரம், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூரில் இடி, மின்னலுடன் மழையும், கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விழுப்புரம், நெல்லை, குமரியில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என கணித்துள்ளது.