News March 18, 2025
கிரிக்கெட் களத்தில் உயிரிழந்த வீரர்… சோகம்!

பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஜுனைத் கான், ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. ரம்ஜான் நோன்பு கடைபிடித்துக் கொண்டிருந்தவர், எதுவும் உண்ணாமல் கடும் வெயிலில் விளையாடியதால், தாக்குபிடிக்க முடியாமல் பலியானார். முன்னதாக, போட்டியின் போது கூல்டிரிங்ஸ் குடித்து, ரம்ஜான் நோன்பை கடைப்பிடிக்க தவறியதாக ஷமி மீது விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 21, 2025
இந்திய எல்லை நாடுகள் தெரியுமா?

இந்தியா, 7 நாடுகளுடன் தரை வழியாகவும், 2 நாடுகளுடன் கடல் வழியாகவும் எல்லையை பகிர்ந்து வருகிறது. அவை என்ன நாடுகள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. நமது நாட்டின் எல்லைகள் குறித்த தகவலை ஷேர் பண்ணுங்க. மேலும், ஆப்கானிஸ்தானுடன் இந்தியா நேரடியாக இல்லாமல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக எல்லையை பகிர்ந்து வருகிறது.
News September 21, 2025
விஜய் முதலில் பரீட்சை எழுதட்டும்: RB உதயகுமார்

2026 தேர்தலில் திமுக – தவெக இடையேதான் போட்டி என்று மீண்டும் நேற்று அழுத்தமாக கூறினார் விஜய். இந்நிலையில், இதுகுறித்து பேசிய RB உதயகுமார், திமுகவுக்கு என்றுமே அதிமுக தான் மாற்று என கூறியுள்ளார். விஜய் தற்போது தான் படித்து கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், முதலில் பரீட்சை எழுதட்டும், பின்னர் அவர் பாஸ் ஆவாரா இல்லையா என்பதை பார்ப்போம் என்றும் விமர்சித்துள்ளார். 2026 தேர்தலில் உங்கள் கணிப்பு என்ன?
News September 21, 2025
நவராத்திரியில் தங்கம் வாங்குவதால்..

எவ்வளவு விலை கூடினாலும், தங்கம் வாங்க மக்கள் ஆர்வம் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றனர். அதே நேரத்தில், தங்கத்தை வாங்குவதற்கு என சில விசேஷ தினங்கள் உள்ளன. அம்மனுக்கு உகந்த நவராத்திரியில் தங்கத்தை வாங்குவதோ, முதலீடு செய்வதோ வாழ்க்கையில் ஏற்றத்தை கொடுக்குமாம். 10-வது நாளான விஜயதசமியில் வாங்குவது கூடுதல் நன்மை கொடுக்கும் எனப்படுகிறது. நாளை நவராத்திரி தொடங்குகிறது. இத்தகவலை நண்பர்களுக்கும் பகிரவும்.