News March 18, 2025
திருமணத்தடை நீக்கும் அறுபடை வீடு முருகன் கோயில்

சென்னை பெசன்ட் நகரில் அறுபடை வீடு முருகன் கோயில் உள்ளது. அறுபடை வீடுகளும் ஒன்றாக சேர்ந்துள்ளதால், பொதுவாக முருகனுக்கே உரிய செவ்வாய் கிழமை, சஷ்டி, கந்த சஷ்டி போன்ற தினங்களில் சிறப்பாக வழிபடுவது போலன்றி இங்கு வீற்றிருக்கும் முருகனை எல்லா நாட்களிலும் வழிபடலாம். இங்கு வழிபட்டால் திருமணத்தடை நீங்கும், புத்திர பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 19, 2025
சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

சென்னையில் ரூ.2000 பஸ் பாஸ் பெற்று இனி ஏசி பேருந்துகளிலும் பயணிக்கும் திட்டத்தை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் இன்று தொடங்கி வைக்கிறார்.மேலும் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 225 ஏசி மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுவதால் பொதுமக்கள் அதிகளவில் பயன்பெறுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை ரூ.1000 பாஸ் மட்டுமே இருந்து வந்தது.ஆனால் அதில் ஏசி பேருந்துகளில் பயணம் செய்ய முடியாது.
News March 19, 2025
சென்னையில் இன்று இரவு காவல் ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 18, 2025
மும்பை இந்தியன்ஸ் உடன் மோதல் தீவிர பயிற்சியில் சிஎஸ்கே வீரர்கள்

சென்னை அணி தங்களுடைய முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை மார்ச் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறாவது முறையாக கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் (மார்ச்17) மைதானத்தில் தீவிர பயிற்சியில் சிஎஸ்கே வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.