News March 18, 2025
மீனவர் கைது: மத்திய அரசுக்கு ஸ்டாலின் மீண்டும் கடிதம்

TN மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு CM ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அதில், 3 ராமேஸ்வரம் மீனவர்கள் கைதாகி இருப்பதை சுட்டிக்காட்டி, கடந்த 3 மாதங்களில் இது 10வது சம்பவம் என கூறியுள்ளார். மேலும், இலங்கை சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள 110 தமிழக மீனவர்கள், படகுகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News March 20, 2025
எந்த மாநிலத்தில் மக்கள் வறுமையால் வாடுகின்றனர்?

இந்தியாவில் அதிகபட்சமாக பிஹாரில் 33.8% மக்கள் வறுமையில் வாழ்வதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் ஜார்கண்ட் 28.8%, மேகாலயா 27.8%, உ.பி.22.9%, ம.பி.20.6%, ஆகிய மாநிலங்கள் உள்ளன. அதேபோல், வறுமையில் வாழும் மக்கள் குறைவாக (5%-க்கும் குறைவு) உள்ள மாநிலங்கள் பட்டியலில், முதலிடத்தில் கேரளா 0.6% உள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடத்தில் (2.2%) உள்ளது.
News March 20, 2025
பூமி வேகமாக சுற்றியும் நமக்கு ஏன் பாதிப்பில்லை?

பூமி மணிக்கு 1,600 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது. அப்படி இருக்கையில், பூமியில் இருக்கும் நாம் ஏன் கீழே விழாமல் அப்படியே இருக்கிறோம் என்பதற்கு அறிவியல் பூர்வமாக விடை அளிக்கப்பட்டுள்ளது. பூமியானது மனிதர்கள், செடி கொடிகள் உள்ளிட்ட அனைத்துடனும் சேர்ந்தே சுற்றுகிறது. இதனால்தான் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும், கீழே விழாமலும் இருக்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.
News March 20, 2025
5 திருமணம் செய்த நடிகர்

பாலிவுட் வில்லன் நடிகரான மகேஷ் ஆனந்த், அமிதாப் பச்சன், அக்சய்குமார் உள்ளிட்ட நடிகர்களுடன் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நைட் கிளப்பில் உண்மையில் அக்சயுடன் கைகலப்பிலும் ஈடுபட்டார். நடிகை ரீனா ராணியின் சகோதரி பார்கா ராய், ரஷ்ய பெண் உள்ளிட்ட 5 பேரை திருமணம் செய்தும் மணவாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை. 57 வயதாகையில் 2019இல் அவர் உயிரிழந்தார். கடைசி காலத்தில் வறுமையில் வாழ்க்கையை கழித்தார்.