News March 18, 2025
கோவையில் 200க்கும் அதிகமான விபத்துக்கள்

கோவை மாநகரில் ஜனவரி 1 முதல் மார்ச் 15ஆம் தேதி வரை, கோவை மாநகரில் 200க்கும் அதிகமான வாகன விபத்துக்கள் நடைபெற்றுள்ளது என தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த 2.5 மாத காலத்தில் நடைபெற்ற 249 விபத்துக்களில், 55 விபத்துக்கள் மிகவும் ஆபத்தான விபத்துகளாக இருந்துள்ளது. இதனால் இப்போது வரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். 223 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 19, 2025
கிராம சபை தேதி மாற்றம்

உலக தண்ணீர் தினத்தை ஒட்டி மார்ச் 22ம் தேதி கிராம சபை கூட்டம் நடக்க உள்ளதாக அரசு அறிவித்தது. அதன் பின் நிர்வாக காரணங்களுக்காக 23ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணங்களால், மார்ச் 23ம் தேதி நடக்க இருந்த கிராம சபை கூட்டத்தை, மார்ச் 29ம் தேதி நடத்த, ஊரக வளர்ச்சி துறை கமிஷனர் பொன்னையா ஊராட்சிகளின் உதவி இயக்குனர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
News March 18, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (18.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 18, 2025
கோவை: நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி!

கோவை கருமத்தம்பட்டி, செந்தில்நகரில் வசிப்பவர்கள் கமலக்கண்ணன்-மீனா தம்பதி. இவர்களது 2 வயது மகன் சிரஞ்சீவி விக்ரம், நேற்று இரவு முதல் காணவில்லை என கூறப்படுகிறது. பின்னர் இன்று காலை வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் பார்த்தபோது, சிரஞ்சீவி நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.