News March 18, 2025
ஏப்ரலில் கார்கள் விலையை உயர்த்தும் மாருதி சுசூகி, டாடா

கார்கள் விலையை மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ் ஆகியவை விரைவில் உயர்த்தவுள்ளன. தயாரிப்பு செலவு அதிகரித்து விட்டதால், வரும் ஏப்ரல் மாதம் முதல் அனைத்து கார்கள் விலையையும் 4% உயர்த்த இருப்பதாக மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே காரணத்தை முன்வைத்து, வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வணிக பயன்பாடு கார்கள் விலையை 2% உயர்த்தப் போவதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
Similar News
News July 8, 2025
அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள்!

தேர்தல் பரப்புரையை <<16979878>>தொடங்கிய இபிஎஸ்<<>> கூட்டணியையும் விரைவில் இறுதி செய்யத் தீவிரம் காட்டியுள்ளாராம். அதிமுக கூட்டணியில் தற்போது, பாஜக, அமமுக, இந்தியக் குடியரசு கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தற்போது புதிதாக(நேற்று) <<16978111>>இந்திய ஜனநாயக கட்சி<<>> இணைந்துள்ளது. பாமக, தேமுதிக தங்களது நிலைப்பாட்டை இன்னும் உறுதி செய்யவில்லை.
News July 8, 2025
காலை 1 கிளாஸ் கற்றாழை ஜூஸ்… இவ்வளோ நல்லதா?

★சிறிதளவு எலுமிச்சை சாறுடன் கற்றாழை ஜூஸை குடிப்பது, எடை இழப்புக்கு உதவும் ★வாய் புண்களை விரட்ட, கற்றாழை ஜூஸ் தான் பெஸ்ட்.
★காற்றாழையில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படும் ★கற்றாழை சாறுடன் நெல்லிக்காயும் சேர்த்து அரைத்து குடித்து வந்தால் முடி ஆரோக்கியமாகவும், வலுவாகவும் மாறும். நீங்களும் ட்ரை பண்ணுங்க. SHARE IT,
News July 8, 2025
‘அயோத்தி’ தெலுங்கு ரீமேக்.. ஹீரோ யார் தெரியுமா?

சசிகுமார் நடிப்பில் பெரும் வெற்றிப் பெற்ற அயோத்தி படம் தெலுங்கில் ரீமேக் ஆவதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. ஆக்ஷன் ஹீரோ நாகர்ஜூனா இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகமாக ஆக்ஷன், மசாலா கலந்து கமர்சியல் படங்களை அதிகம் விரும்பும் தெலுங்கு ஆடியன்ஸ் எதார்த்தமாக எடுக்கப்பட்ட அயோத்தி படத்தை ஏற்றுக் கொள்வார்களா?