News March 18, 2025
இந்த வாட்ஸ் அப் நம்பர்கள் உங்க ஃபோனில் அவசியம்!

ஏடிஎம் கார்டு திருடுப் போதல், வங்கிக் கணக்கில் பணம் மாயமாதல் போன்ற எந்த பிரச்னையாக இருந்தாலும், முதலில் கைக்கொடுப்பது வங்கிகள்தான். எனவே, வங்கிகளின் வாட்ஸ் அப் சேவை எண்கள் செல்போனில் இருத்தல் அவசியம். • எச்டிஎப்சி – 70700 22222. • எஸ்பிஐ – 90226 90226. • கனரா – 90760-30001 • ஐடிஎப்சி – 95555 55555. • இந்தியன் வங்கி – 87544 24242. ஐசிஐசிஐ – 86400 86400. • யூனியன் வங்கி – 96666 06060.
Similar News
News March 19, 2025
5 நிமிடம் சார்ஜ் செய்தால் 470KM பயணிக்கலாம்.. அசத்தும் BYD

சீன EV கார் தயாரிப்பு நிறுவனமான BYD, வணிக சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5-8 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய அந்நிறுவனம், தங்கள் காரை 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே, 470KM தூரம் பயணிக்கலாம் என்கிறது. இதற்காக, சீனா முழுவதும் 4,000 அதிவேக சார்ஜிங் ஸ்டேஷன்களை உருவாக்க உள்ளதாகவும் கூறியுள்ளது. இது போட்டியாளர்களான Tesla, Benzக்கு சவாலாக கருதப்படுகிறது.
News March 19, 2025
இன்று போராட்டம் நடத்தினால் சம்பளம் இல்லை: அரசு வார்னிங்

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால், ஊதியம் கிடையாது என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் இன்று வேலைநிறுத்தம் அறிவித்திருந்தன. இந்நிலையில், மருத்துவ விடுப்பை தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ எடுக்கக்கூடாது என்றும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டால் ஒருநாள் ஊதியம் பிடிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
News March 19, 2025
சுனிதா, வில்மோர் நலமாக உள்ளதாக நாசா அறிவிப்பு

9 மாதங்களுக்கு பிறகு விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் நலமுடன் இருப்பதாக நாசா அறிவித்துள்ளது. இருவரும் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.