News March 18, 2025
பிரதமர் மோடியை சந்தித்த இளையராஜா!

இளையராஜாவின் சாதனை மகுடத்தில் மற்றொரு வைரக்கல்லாய் அமைந்திருக்கிறது சிம்பொனி அரங்கேற்றம். இந்நிலையில், பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசியுள்ளார். பிரதமருடனான புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த இளையராஜா, மறக்க முடியாத சந்திப்பு எனக் குறிப்பிட்டுள்ளார். சிம்பொனி உள்பட பல விஷயங்கள் குறித்து தாங்கள் பேசிக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 22, 2025
நாய், பூனை சண்டையால் பிரியும் தம்பதி

போபால் குடும்ப கோர்ட்டில் விநோதமான வழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளது. கணவர் வளர்க்கும் நாயும், மனைவி வளர்க்கும் பூனையும் எப்போதுமே சண்டையிட்டு கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. பலமுறை முயன்றும் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாததால், தங்களுக்குள் விவகாரத்து பெறுவதே தீர்வு என அந்த தம்பதி கோர்ட்க்கு சென்றுள்ளது. 2024-ல் திருமணம் செய்த தம்பதி செல்லப் பிராணிகளால் பிரிவது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
News September 22, 2025
இது ‘முருங்கை’ சமாச்சாரம்!

ஆண்களின் பாலியல் செயல்பாட்டை `முருங்கை’ வலுப்படுத்துவதாக ஆய்வில் உறுதியாகியுள்ளது. முருங்கை விதை, இலைகளில் உள்ள குளூக்கோசினோலேட், பாலி பீனால்கள் மற்றும் சில வகை ஆன்டிஆக்சிடன்ட் சத்துகள் ஆணுறுப்பில் ரத்தவோட்டத்தை அதிகரிப்பதால் விறைப்புத்தன்மை குறைபாடு நீங்குகிறது, விந்தணுக்கள் சேதத்தை குறைப்பதால் மலட்டுத்தன்மை நீங்குகிறது. மேலும், புராஸ்டேட் சுரப்பி வீக்கம் மற்றும் புற்றுநோயையும் இது தடுக்கிறது.
News September 22, 2025
காயங்களை ஆற்றும் எச்சில்

உங்களின் வாய் சாப்பிட உதவும் உறுப்பு மட்டுமல்ல, அது நோய்களை குணப்படுத்தும் சிறந்த அமைப்பு என்கின்றனர் ஆய்வாளர்கள். வாயில் சுரக்கும் எச்சிலில் (உமிழ்நீர்) உள்ள ஹிஸ்டாடின்ஸ் போன்ற புரோட்டீன்கள், காயமடைந்த திசுக்களை விரைவாக குணப்படுத்துவதாகவும், ஆண்டி செப்டிக் மருந்துகளை விட சிறப்பாக செயல்படுவதாகவும் கண்டறிந்துள்ளனர். இதனால் தான், வாயில் ஏற்படும் புண்கள் ஆச்சரியமூட்டும் வேகத்தில் குணமடைகிறதாம்.