News March 18, 2025

இன்றைய டாப் செய்திகள்

image

*நகைக் கடன் பெற RBI-யின் புதிய விதிமுறைகள்.
*இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் 342 பேர் பலி.
*அடுத்த 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்: IMD அறிவிப்பு.
*சிறுமியை பலாத்காரம்: காமெடி நடிகருக்கு 20 ஆண்டுகள் சிறை.
*செங்கோட்டையனுக்கு சப்போர்ட் பண்ண இபிஎஸ்: சட்டசபையில் சுவாரஸ்யம்.
*சக்திவாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம்.

Similar News

News September 22, 2025

மக்களிடம் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: கார்கே

image

PM மோடியின் <<17784663>>பேச்சை<<>> காங்., தலைவர் கார்கே விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கொண்டுவந்த எளிமையாக ஜிஎஸ்டியை விட்டுவிட்டு மோசமாக வரியை பாஜக அரசு கொண்டு வந்ததாக சாடிய அவர், கடந்த 8 ஆண்டுகளில் ₹55 லட்சம் கோடியை வசூலித்துவிட்டு ₹2.5 லட்சம் கோடி மக்கள் சேமிக்கலாம் என பிரதமர் கூறுவதாகவும், பெரிய காயத்துக்கு சிறிய பேண்ட்-எய்ட் போட்டுள்ள மோடி அரசு, இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் கார்கே கோரியுள்ளார்.

News September 22, 2025

கடனில் தத்தளிக்கும் அமெரிக்கா

image

உங்களுக்கு சந்தேகம் வந்தாலும், அதுதான் உண்மை. பணக்கார தேசமாக இருந்தாலும், அந்நாட்டு அரசின் கடன் விண்ணைத் தாண்டி உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் கடனுக்கான வட்டியாக சுமார் ₹107 லட்சம் கோடி கட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அந்நாட்டு பட்ஜெட்டில் 15–18% ஆகும். அந்நாட்டின் மொத்த கடன் ₹3,294 லட்சம் கோடியாம். டாலர் ஆதிக்கம் குறைந்தால் அமெரிக்க பொருளாதாரம் சரியும் என்கின்றனர் நிபுணர்கள்.

News September 22, 2025

நாய், பூனை சண்டையால் பிரியும் தம்பதி

image

போபால் குடும்ப கோர்ட்டில் விநோதமான வழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளது. கணவர் வளர்க்கும் நாயும், மனைவி வளர்க்கும் பூனையும் எப்போதுமே சண்டையிட்டு கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. பலமுறை முயன்றும் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாததால், தங்களுக்குள் விவகாரத்து பெறுவதே தீர்வு என அந்த தம்பதி கோர்ட்க்கு சென்றுள்ளது. 2024-ல் திருமணம் செய்த தம்பதி செல்லப் பிராணிகளால் பிரிவது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

error: Content is protected !!