News April 1, 2024
புதிய வருமான வரி விதிகள் அமலுக்கு வரவில்லை

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தபடி, புதிய வரி விதிகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக தகவல் வெளியான நிலையில், மத்திய நிதியமைச்சகம் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஏப்.1 முதல் எவ்வித புதிய வரி நடைமுறையும் அமலுக்கு வரவில்லை என விளக்கமளித்த நிதியமைச்சகம், வரி செலுத்துவோர் தங்களுக்கு எது நன்மை பயக்கும் என்று நினைக்கிறார்களோ அந்த வரி முறையை (Old or New) தேர்வு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
Similar News
News December 30, 2025
‘விஜய் தேர்தலுக்கு பின் நடிக்க வருவார்’

கரியரின் உச்சத்தை விட்டுவிட்டு முழு அரசியல்வாதி ஆகியுள்ளார் விஜய். இதனால் கவலையில் உள்ள அவரது ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளார், நடிகை சிந்தியா லூர்டே. புது இயக்குநர் தினேஷ் தீனா இயக்கும் ‘அனலி’ டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நாயகியாக நடிக்கும் சிந்தியா, 2 வருடத்திற்குள் விஜய் மீண்டும் படத்தில் நடிப்பார் எனவும், அவருடன் நிச்சயம் நடிப்பேன் என்றும் பேசியுள்ளார்.
News December 30, 2025
புதிய சாதனை படைத்த ஜேசன் ஹோல்டர்

T20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் பெற்றுள்ளார். 2025-ல் மட்டும் அவர், 67 போட்டிகளில் 97 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ரஷித் கானின் சாதனையை (96 விக்கெட்கள், 2018) அவர் முறியடித்துள்ளார். 3-வது இடத்தில் டுவைன் பிராவோ (87 விக்கெட்கள், 2016) உள்ளார். ஹோல்டரை GT அணி, IPL மினி ஏலத்தில் ₹7 கோடிக்கு வாங்கியுள்ளது.
News December 30, 2025
RSS நினைப்பதை சீமான் பிரதிபலிக்கிறார்: திருமா

சீமான் பேசும் அரசியலில் பெரியார் வெறுப்பு ஆழமாக உள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார். திமுகவை மட்டுமே சீமான் எதிர்க்கவில்லை என்ற அவர், அதன் அடிப்படை தத்துவத்தை கேள்விக்குறியாக்குகிறார் எனவும், RSS நினைப்பதை சீமான் பிரதிபலிக்கிறார் என்றும் விமர்சித்துள்ளார். மேலும், இதனால்தான் சீமானின் கருத்தை விமர்சிப்பதாகவும், தனிப்பட்ட வெறுப்பும், உள்நோக்கமும் இல்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.


