News March 18, 2025
ஒரு நாளில் 24 மணி நேரம்… எப்படி வந்தது தெரியுமா?

ஒரு நாளில் 24 மணி நேரம் என்பதை நாம் அறிவோம். அது எப்படி நிர்ணயிக்கப்பட்டது என தற்போது பார்க்கலாம். பூமி தன்னைத் தானே சுற்றியபடி, சூரியனை சுற்றி வருகிறது. இதில் பூமி தன்னைத் தானே ஒருமுறை சுற்ற சரியாக 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. அப்போது பகல், இரவு ஆகியவை மாறி மாறி வரும். இந்த 24 மணி நேரம்தான், ஒருநாள் என கணக்கிடப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு மணி நேரமும் 60 நிமிடங்கள் ஆகும்.
Similar News
News March 20, 2025
ராசி பலன்கள் (20.03.2025)

➤மேஷம் – பக்தி ➤ரிஷபம் – வெற்றி ➤மிதுனம் – வரவு ➤கடகம் – துன்பம் ➤சிம்மம் – நிறைவு ➤கன்னி – பணிவு ➤துலாம் – சிரமம் ➤விருச்சிகம் – இரக்கம் ➤தனுசு – பிரீதி ➤மகரம் – சுகம் ➤கும்பம் – நலம் ➤மீனம் – தொல்லை.
News March 20, 2025
ஐபிஎல்: அதிக கேட்ச் பிடித்த வீரர்

2008- 2024 வரையிலான ஐபிஎல்லில் அதிக கேட்ச் பிடித்த வீரர் யார் என பார்க்கலாம். ஆர்சிபி வீரர் விராட் கோலியே இந்த சாதனையை படைத்துள்ளார். 252 போட்டிகளில் விளையாடி 114 கேட்ச்களை அவர் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்து, EX சிஎஸ்கே வீரர் ரெய்னா 205 போட்டிகளில் விளையாடி 109 கேட்ச்களை பிடித்துள்ளார். பொலார்ட், ரவீந்திர ஜடேஜா தலா 103 கேட்ச்களையும், ரோஹித் சர்மா 101 கேட்ச்களையும் பிடித்துள்ளனர்.
News March 20, 2025
எந்த மாநிலத்தில் மக்கள் வறுமையால் வாடுகின்றனர்?

இந்தியாவில் அதிகபட்சமாக பிஹாரில் 33.8% மக்கள் வறுமையில் வாழ்வதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் ஜார்கண்ட் 28.8%, மேகாலயா 27.8%, உ.பி.22.9%, ம.பி.20.6%, ஆகிய மாநிலங்கள் உள்ளன. அதேபோல், வறுமையில் வாழும் மக்கள் குறைவாக (5%-க்கும் குறைவு) உள்ள மாநிலங்கள் பட்டியலில், முதலிடத்தில் கேரளா 0.6% உள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடத்தில் (2.2%) உள்ளது.