News March 18, 2025

பிரபல காமெடி நடிகருக்கு 20 ஆண்டுகள் சிறை

image

யூடியூப்பில் காமெடி வீடியோ பதிவிட்டு புகழ்பெற்றவர் நகைச்சுவை குள்ள நடிகர் தர்ஷன். ஹரியானாவைச் சேர்ந்த இவர் மீது பட வாய்ப்பு கேட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என கோர்ட் அறிவித்து அபராதத்துடன் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. மேலும், சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News March 20, 2025

ஐபிஎல்: அதிக கேட்ச் பிடித்த வீரர்

image

2008- 2024 வரையிலான ஐபிஎல்லில் அதிக கேட்ச் பிடித்த வீரர் யார் என பார்க்கலாம். ஆர்சிபி வீரர் விராட் கோலியே இந்த சாதனையை படைத்துள்ளார். 252 போட்டிகளில் விளையாடி 114 கேட்ச்களை அவர் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்து, EX சிஎஸ்கே வீரர் ரெய்னா 205 போட்டிகளில் விளையாடி 109 கேட்ச்களை பிடித்துள்ளார். பொலார்ட், ரவீந்திர ஜடேஜா தலா 103 கேட்ச்களையும், ரோஹித் சர்மா 101 கேட்ச்களையும் பிடித்துள்ளனர்.

News March 20, 2025

எந்த மாநிலத்தில் மக்கள் வறுமையால் வாடுகின்றனர்?

image

இந்தியாவில் அதிகபட்சமாக பிஹாரில் 33.8% மக்கள் வறுமையில் வாழ்வதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் ஜார்கண்ட் 28.8%, மேகாலயா 27.8%, உ.பி.22.9%, ம.பி.20.6%, ஆகிய மாநிலங்கள் உள்ளன. அதேபோல், வறுமையில் வாழும் மக்கள் குறைவாக (5%-க்கும் குறைவு) உள்ள மாநிலங்கள் பட்டியலில், முதலிடத்தில் கேரளா 0.6% உள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடத்தில் (2.2%) உள்ளது.

News March 20, 2025

பூமி வேகமாக சுற்றியும் நமக்கு ஏன் பாதிப்பில்லை?

image

பூமி மணிக்கு 1,600 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது. அப்படி இருக்கையில், பூமியில் இருக்கும் நாம் ஏன் கீழே விழாமல் அப்படியே இருக்கிறோம் என்பதற்கு அறிவியல் பூர்வமாக விடை அளிக்கப்பட்டுள்ளது. பூமியானது மனிதர்கள், செடி கொடிகள் உள்ளிட்ட அனைத்துடனும் சேர்ந்தே சுற்றுகிறது. இதனால்தான் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும், கீழே விழாமலும் இருக்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!