News March 18, 2025
மீண்டும் சென்னையில் கால் பதிக்கும் FORD

சென்னையில் FORD நிறுவனம் கார் இன்ஜின் உற்பத்தி, ஏற்றுமதியை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு அதிகாரிகளுடன் சமீபத்தில் அந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு இந்தியாவில் உற்பத்தியை நிறுத்திய நிலையில், 2024ல் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், FORD நிறுவன அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 22, 2025
சி.வி.ராமன் பொன்மொழிகள்

*அறிவியலின் சாராம்சம் உபகரணங்கள் அல்ல, சுதந்திரமான சிந்தனை, கடின உழைப்பு.
*ஆர்வம், கற்பனை மற்றும் விடாமுயற்சி ஆகிய மூன்று முனை அணுகுமுறையே அறிவியல் கண்டுபிடிபுக்கான திறவுகோலாகும்.
*அறிவியலின் அழகு, பிரபஞ்சத்தின் மர்மங்களை அவிழ்க்கும் திறனில் உள்ளது.
*ஒவ்வொரு பெரிய கண்டுபிடிப்பும் தெரியாதவற்றில் ஆழமாக ஆராயும் ஆர்வத்தால் வளர்க்கப்படும் ஒரு யோசனையும் தொடங்குகிறது.
News September 22, 2025
நடிகர் – நடிகைகள் மீது அவதூறு பரப்பினால் சிறை

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்: *யூடியூப்பில் உறுப்பினர்கள் பற்றி அவதூறு பரப்புபவர்களுக்கு 3 மாத கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்க வேண்டும். *மன உளைச்சலுக்கு உள்ளான உறுப்பினருக்கு அந்த நபர் ₹3 லட்சம் மான நஷ்ட ஈட்டு வழங்க வேண்டும். *அவதூறு செய்தியை பரப்பிய யூடியூப் சேனல் முடக்கப்பட வேண்டும்.
News September 22, 2025
வரலாற்றில் இன்று

➤1931 – எழுத்தாளர் அசோகமித்திரன் பிறந்தநாள்.
➤1941 – உக்ரைனில் 6,000 யூதர்கள் நாஜி படையால் கொல்லப்பட்டனர்.
➤1960 – பிரான்ஸிடம் இருந்து மாலி விடுதலை அடைந்தது.
➤1965 – இந்திய-பாகிஸ்தான் போர் ஐநாவால் முடிவுக்கு வந்தது.
1995 – நாகர்கோயில் பாடசாலை குண்டுவீச்சில் 34 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.