News March 18, 2025
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு?

தமிழகத்தில் 58,000 அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 1.2 கோடி மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தப் பள்ளிகளில் மார்ச் 1ம் தேதி தொடங்கிய மாணவர் சேர்க்கையில், 17ம் தேதி வரையில் 1.28 லட்சம் மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது. எனினும், கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில், 1.50 லட்சம் மாணவர்கள் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 22, 2025
US தடையை இந்தியா வளர்ச்சியாக மாற்றலாம்: ஸ்ரீதர்

H-1B விசா கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளதை இந்தியா சாதமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ஸோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். இதில் சவால்கள் இருந்தாலும் புதிய வாய்ப்புகள் அதிகமாக உருவாகும் என நம்பிக்கையுடன் கூறியுள்ளார். நமக்கு தேவையான ஊழியர்கள் உள்நாட்டில் இருக்கும் போது உள்நாட்டு கண்டுபிடிப்புகளை அதிகப்படுத்தி வளர்ச்சியடையலாம் என ஸ்ரீதர் குறிப்பிட்டுள்ளார்.
News September 22, 2025
கல்வியை அரசியல் கருவியாக மாற்றும் பாஜக: காங்கிரஸ்

தமிழக அரசு மும்மொழிக் கொள்கையில் அரசியல் செய்ய வேண்டாம் என மத்திய அமைச்சர் <<17782552>>தர்மேந்திர பிரதான்<<>> தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய அரசு கல்வியை அரசியல் கருவியாக மாற்றி, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை அச்சுறுத்துவதாக செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். கல்வி மக்களின் அடிப்படை உரிமை என கூறிய அவர் உடனடியாக TN-ன் கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News September 22, 2025
30-ம் தேதிக்குள் தயாராக இருங்கள்: ECI புதிய உத்தரவு

பெரும் சர்ச்சைக்கு மத்தியில் சிறப்பு தீவிர திருத்த பணியை(SIR) தேர்தல் ஆணையம் பிஹாரில் மேற்கொண்டது. அதேபோல நாடு முழுவதும் SIR-ஐ மேற்கொள்ள ECI முடிவு செய்து அதற்கான பணியை தொடங்கியுள்ளது. அதன்படி நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்த பணியை மேற்கொள்ள, 30-ந் தேதிக்குள் தயாராக இருக்குமாறு அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளையும் ECI கேட்டுக்கொண்டுள்ளது.