News March 18, 2025
நாக்பூரில் வெடித்த கலவரம்: காரணம் என்ன?

நாக்பூரில் கலவரம் மூண்டதற்கு ‘சாவா’ திரைப்படமே காரணமாகி இருக்கிறது. சட்டப்பேரவையில் படத்தை குறிப்பிட்டு, அவுரங்கசீப்பை புகழ்ந்து சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஹாஸ்மி கோஷமிட்டதால், விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போது புனித நூலை அவர்கள் எரித்ததாக வதந்தி பரவியதால், வன்முறை மூண்டு கலவரமாக வெடித்தது.
Similar News
News September 22, 2025
ஆசிய கோப்பையில் மீண்டும் IND vs PAK?

ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 3-வது முறையாக மோத மீண்டும் வாய்ப்புள்ளது. அடுத்த இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால், இந்திய அணி இறுதி போட்டியை எட்டி விடும். அதே போல, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டாலும், இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது. இதனால், மீண்டும் ஒருமுறை இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் வாய்ப்பு ஏற்படும்.
News September 22, 2025
கல்வித் தரத்தை அவமதிக்கும் ஆர்.என்.ரவி: வேல்முருகன்

தமிழக மாணவர்களின் கல்வித் தரத்தை இழிவுபடுத்தும் வகையில், கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து கூறுவதாக தவாக தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகம் என்றாலே கல்வி, அறிவு, திறமை என்பது நாடு முழுவதும் பெருமையாகப் பேசப்படும் ஒன்று. அந்தக் கல்வித் தரத்தை குறைத்து மதிப்பிட்டு, “TN-ல் தரமான கல்வி இல்லை” என கவர்னர் பேசியிருக்கிறார். இதை உடனே அவர் திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
News September 22, 2025
காலையில் இந்த மூலிகை தேநீர் போதும்.. அவ்வளோ நல்லது!

விலை இலை தேநீர் குடிப்பதால், உடலில் உள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றி, குடலை தூய்மைப்படுத்த உதவும். *புதிய வில்வ இலைகளை நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும் *இவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்கவும் *காலையில், இந்த இலைகள் இருக்கும் தண்ணீரை சூடுபடுத்தி, கொதிக்க விடவும் *பிறகு வடிகட்டி, தேன் அல்லது வெல்லம் சேர்த்து பருகலாம். இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு பகிரவும்.