News March 18, 2025
டிராகன் -யானை டான்ஸ் தான் தீர்வு: சீனா

பங்காளிகளாக பரஸ்பர ஒத்துழைப்பை வழங்கி, டிராகன் – யானை நடனத்தை அடைவது மட்டும் தான் சீனா- இந்தியாவிற்கு சரியான தேர்வாக இருக்கும் என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது. முன்னதாக, அண்டை நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பது இயற்கையானதுதான், அதற்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என பிரதமர் மோடி பேசியிருந்தார்.
Similar News
News July 9, 2025
பிகினியில் பிரபல நடிகை… வைரலாகும் PHOTOS

பாலிவுட் நடிகை கரீனா கபூரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோக்களை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோக்கள் அவர் வெளிநாடு சென்றபோது எடுத்ததா அல்லது போட்டோ ஷூட்டுக்காக எடுத்ததா எனத் தெரியவில்லை. இந்நிலையில், 44 வயதிலும் கரீனா இவ்வளவு இளமையுடனும், ஃபிட்டாகவும் இருக்கிறாரே என நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
News July 9, 2025
நாளை ‘பாரத் பந்த்’ ஏன்?

நாளை நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில், வங்கி, இன்ஷூரன்ஸ், போக்குவரத்து, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 10-க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் சார்ந்த சுமார் 25 கோடி பேர் பங்களிப்பர் எனக் கூறப்படுகிறது. மத்திய அரசின் தொழிலாளர் விரோத, விவாசயிகள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை கண்டித்தும், சிறந்த பணிப் பாதுகாப்பு, சம்பளம், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை கோரியும் இந்த பந்த் நடைபெறுகிறது.
News July 9, 2025
ஆப்பிளை பின்னுக்கு தள்ளிய ஒன்லிஃபேன்ஸ்

பணியாளருக்கு ஈடான வருமானத்தை ஈட்டுவதில் டெக் ஜெயண்ட் நிறுவனங்களான ஆப்பிள், NVIDIA நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி ஆபாச சோஷியல் மீடியா தளமான ஒன்லிஃபேன்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. ஒன்லிஃபேன்ஸ், ஒரு பணியாளருக்கு $37.6 மில்லியன் டாலர் என்ற அளவில் வருமானம் ஈட்டுகிறது. வால்வ் ($19M), யூட்யூப் ($7.6M), NVIDIA ($3.6M), இன்ஸ்டாகிராம் ($2.5M), ஆப்பிள் ($2.4M) மெட்டா ($2M) வருமானம் ஈட்டுகின்றன.