News March 18, 2025
கரூர்: இலவச TNPSC பயிற்சி வகுப்பு

கரூரில், ‘செந்தில் பாலாஜி அறக்கட்டளை’ நடத்தும் TNPSC குரூப் 4 கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் மார்ச். 30ஆம் தேதி முதல் தொடர்கின்றது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின் படி புத்தகங்கள் வழங்கப்படும். தினசரி மற்றும் வார வகுப்புகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 8148192175 என்ற எண்ணை அழைக்கவும். இதை உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.
Similar News
News November 12, 2025
வாக்கு சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆய்வு கூடடம்

கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இ.ஆ.ப., தலைமையில் இன்று (12.11.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026க்கான கணக்கீட்டு படிவத்தினை வழங்கும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
News November 12, 2025
கரூர் ரயில்வே நிலையத்தில் எஸ்.பி திடீர் ஆய்வு

கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வாகனச் சோதனை மற்றும் இரவு ரோந்து பணிகளை மாவட்ட எஸ்.பி ஜோஸ் தங்கையா நேரில் சென்று ரயில்வே நிலையத்தில் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில் அவ்வழியாக வந்த சந்தேகிக்கப்படக்கூடிய வாகனங்கள் நிறுத்தப்பட்டு, ஓட்டுநர்களின் உரிமம் மற்றும் வாகன ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பையும், சட்ட ஒழுங்கையும் உறுதி செய்தார்.
News November 12, 2025
தமிழ் கனவு மூன்றாம் கட்ட நிகழ்ச்சி

கரூர் மாவட்டத்தில் தமிழ் கனவு நிகழ்வு மூன்றாம் கட்டமாக, தளவாபாளையம் M.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நிகழ்ச்சியில் “அறிவின் வழியே மானுட விடுதலை” என்ற தலைப்பின் கீழ் வழக்கறிஞர் மதிவதனி, கல்லூரி மாணவ மாணவியர்களிடையே நாளை 13.11.2025 அன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ள நிலையில் சொற்பொழிவு ஆற்ற உள்ளார் என மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.


