News March 18, 2025

டெல்லி புறப்பட்டுச் சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

image

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். மும்மொழி கொள்கை விவகாரம், ₹1,000 கோடி டாஸ்மாக் ஊழல், போராட்டம் நடத்திய பாஜக கைது என பல்வேறு விவகாரங்கள் தமிழகத்தில் சூடு பிடித்திருக்கும் நிலையில், அவரது இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. டெல்லியில் அவர் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரை சந்திக்கலாம் என கூறப்படுகிறது.

Similar News

News March 19, 2025

நாய்க்கடியால் உயிரிழந்தால் இழப்பீடு: அரசு அறிவிப்பு

image

நாய்க்கடியால் உயிரிழப்பு ஏற்பட்டால், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்க CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, நாய்க்கடியால் மாடு இறந்தால் ₹37,500, ஆடு இறந்தால் ₹6,000, கோழி இறந்தால் ₹200 இழப்பீடு வழங்கப்படும் என்றார். இதுவரை தெருநாய் கடித்து உயிரிழந்த 1,149 பிராணிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

News March 19, 2025

சாஹல்- தனஸ்ரீ விவாகரத்து வழக்கில் நாளை தீர்ப்பு

image

சாஹல்- தனஸ்ரீ விவகாரத்து வழக்கில் குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்க மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்து திருமணச் சட்டத்தின் கீழ், சமரச காலத்தை தள்ளுபடி செய்ய குடும்ப நல நீதிமன்றம் மறுத்த தீர்ப்பை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. மேலும், சாஹல் ஐபிஎல்லில் பங்கேற்க வேண்டும் என்பதால், இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கவும் ஆணையிட்டுள்ளது. கடந்த 2020ல் இவர்களுக்கு திருமணமானது.

News March 19, 2025

பள்ளி மாணவர் மீது தாக்குதல்: SC, ST ஆணையம் விசாரணை

image

தூத்துக்குடியில் பள்ளி மாணவர் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக, தேசிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. மாணவன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் போது இருந்த நிலை மற்றும் தற்போதைய நிலை குறித்து ஹாஸ்பிடல் முதல்வரிடம் அவர்கள் கேட்டறிந்தனர். கடந்த 10ம் தேதி மாணவன் பொதுத்தேர்வு எழுத பேருந்தில் சென்றபோது, 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது.

error: Content is protected !!