News March 18, 2025
ரஷ்யா, பிரான்ஸை ஓரங்கட்டிய இந்தியா!

2024ல் அதிக அதிகாரமிக்க நாடுகளின் டாப் 10 பட்டியலில் இந்தியா இடம்பிடித்துள்ளது. அதுவும் ரஷ்யா, பிரான்ஸ், UKவை ஓரங்கட்டி 0.30 புள்ளிகள் பெற்று முன்னேறி இருக்கிறது. எப்போதும் போல, 0.89 புள்ளிகளுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 0.80 புள்ளிகளுடன் சீனா 2வது இடத்திலும் நீடிக்கின்றன. பொருளாதாரம், ராணுவம், முதலீட்டு மூலதனத்தை கொண்டு நாடுகளின் பலம் கணக்கிடப்பட்டுள்ளது.
Similar News
News March 19, 2025
மார்ச் 19: வரலாற்றில் இன்று!

*1915 – புளூட்டோவின் புகைப்படம் முதல்முறையாக எடுக்கப்பட்டது.
*1944 – 2ஆம் உலகப் போர்: நாசி ஜெர்மனிப் படைகள் ஹங்கேரியைக் கைப்பற்றின.
*1962 – அல்ஜீரியா விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.
1972 – இந்தியாவும் வங்கதேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
*1988 – இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். ஏப்ரல் 19இல் இறந்தார்.
News March 19, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: ஒப்புரவறிதல் ▶குறள் எண்: 211
▶குறள்: கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.
▶பொருள்: கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.
News March 19, 2025
இன்றைய (மார்ச் 19) நல்ல நேரம்

▶மார்ச் – 19 ▶பங்குனி – 05 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 01:30 PM ▶எமகண்டம்: 07:30 AM – 09:00 AM ▶குளிகை: 10:30 AM- 12:00 PM ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.