News March 18, 2025
சமாதானம் அடைந்த செங்கோட்டையன்?

மூத்த தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், செங்கோட்டையன் சமாதானம் அடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. EPS மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வந்தார். இந்நிலையில், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் செங்கோட்டையனிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், சுமுகத் தீர்வு எட்டப்பட்டதாகவும், இனி கருத்துவேறுபாடு இருக்காது எனவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
Similar News
News March 18, 2025
நிர்வாணமாக நடித்தது ஏன்…. மனம் திறந்த சம்யுக்தா

‘சுழல் 2’ வெப்சீரிஸில் நிர்வாண காட்சிகளில் சம்யுக்தா விஸ்வநாதன் நடித்துள்ளது பேசு பொருளாகியுள்ளது. இதுபற்றி கூறியுள்ள அவர், இந்த காட்சிகளில் நடிக்கும் முன், தன் தாயிடம் சொல்லி ஒப்புதல் பெற்றதாகவும், சிறையில் நடக்கும் சம்பவங்களை மிகவும் ராவாக இயக்குநர் படமாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் கட்டாயப் படுத்தவில்லை என்றும், கதைக்கு தேவைப்பட்டதால் அப்படி நடித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
News March 18, 2025
10வது படித்திருந்தால் போதும்; ரூ.69,100 சம்பளம்!

சிஐஎஸ்எப் துணை ராணுவப் படையில் காலியாக உள்ள 1,161 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18 முதல் 23 வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 10ஆம் வகுப்பு முடித்து ஐடிஐ தேர்ச்சி, இதற்கு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாத சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு: https://cisfrectt.cisf.gov.in/
News March 18, 2025
ஐபோனுக்கு போட்டியாக வரும் கூகுள் பிக்செல் 9a…!

ஐபோன் 16e-க்கு இணையான அம்சங்களுடன் கூகுள் பிக்செல் 9a மாடல் நாளை அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், 48MP பின்பக்க கேமரா, 13MP செல்ஃபி கேமரா, 5,100mAh பேட்டரி திறன் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. மேலும், 8GB RAM, 256GB STORAGE, வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்ட சிறப்புகளும் உள்ளதாம். இதன் விலை ரூ.55,000 ஆக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.