News March 18, 2025
ரெண்டாவது மனைவி, மூனாவது மனைவி பிரச்னை

இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியும், நடிகருமான பாலா, கொச்சி போலீசில் தனது முன்னாள் மனைவிகள் மீது புகார் அளித்துள்ளார். தனது இரண்டாவது மனைவியான அம்ருதாவும், மூன்றாவது மனைவியான எலிசபெத்தும் சேர்ந்து சமூக வலைத்தளங்களில் தன்னைப்பற்றி அவதூறு பரப்புவதாக புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரை அளிக்க, அவர் தனது நான்காவது மனைவி கோகிலாவுடன் வந்திருந்தார்.
Similar News
News July 8, 2025
ரஜினி பட வசனத்தை பச்சை குத்திய NZ கிரிக்கெட் வீரர்

NZ கிரிக்கெட் வீரரான ஆதித்யா அசோக் ’படையப்பா’-ல் வரும் ‘என் வழி தனி வழி’ என்ற வசனத்தைப் பச்சை குத்தியுள்ளார். வேலூர் மாவடத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் 4 வயது முதல் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். தனது தாத்தா உயிரிழப்பதற்கு முன்பு அவருடன் ’படையப்பா’ படம் பார்த்ததாகவும், அவர் இறப்புக்கு பின்பு அவருக்கும் தனக்குமான நெருக்கமான உரையாடலை நினைவூட்ட பச்சை குத்தியதாகவும் தெரிவித்தார்.
News July 8, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஜூலை 8 – ஆனி 24 ▶ கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶ எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶ குளிகை: 12:00 PM – 1:30 PM ▶ திதி: த்ரயோதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶ பிறை: வளர்பிறை.
News July 8, 2025
நாளைக்கு வேகமாக சுற்றப் போகும் பூமி: ஏன் தெரியுமா?

நாம் வாழும் பூமி, மணிக்கு 1,600 கிமீ வேகத்தில் தன்னைத்தானே சுற்றிச் சுழல்கிறது. இந்நிலையில், வரும் ஜூலை 9, ஜூலை 22, ஆகஸ்ட் 5 ஆகிய 3 நாள்களிலும் சற்று அதிகமான வேகத்தில் பூமி சுற்றப் போவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஒரு நாளில் 1.51 மில்லி செகண்ட் குறையுமாம். பூமியின் வேகத்துக்கு காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை. எனினும், இதனால், எந்த பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.