News March 18, 2025
திருப்பூரில் வேலை வாய்ப்பு முகாம்

திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்புதுறை (ம) தொழில் நெறி வழிகாட்டுதல் மையம் சார்பில் வரும் 29ஆம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாம் பல்லடம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் 8, 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் பங்கேற்றலாம். வேலை இல்லாதவர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமை மிஸ் பண்ணிடாதீங்க. அப்புறம் Share பண்ணுங்க.
Similar News
News November 10, 2025
திருப்பூர்: 12th, டிப்ளமோ, டிகிரி போதும்! லட்சத்தில் சம்பளம்

ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலில் உள்ள குரூப் ஏ, பி (ம) சி பிரிவில் உள்ள பணி வாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 12, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு ரூ.19,900 முதல் 1,77 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://eapplynow.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க நவ.26-ம் தேதி கடைசி ஆகும்
News November 10, 2025
திருப்பூர்: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி?

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர், 1.கூட்டு பட்டா, 2.விற்பனை சான்றிதழ், 3.நில வரைபடம், 4.சொத்து வரி ரசீது, 5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம். இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 10, 2025
தாராபுரத்தில் மோதல்!

திருப்பூர், தாராபுரம் அரசு மருத்துவமனை முன்பாக சுமார் 15-க்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் விபத்து ஏற்பட்டால் யார் முதலில் செல்வது என்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் மதன்குமார் மற்றும் மனோஜ் குமார் ஆகிய இருவர் காயமடைந்த நிலையில், புகாரின் பேரில் தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


