News March 18, 2025

கோடை வெயிலில் தற்காத்துக் கொள்ள கலெக்டர் அறிவுரை

image

திருவாரூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடக்கத்திலேயே அதிகமாக இருக்கிறது. எனவே வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும், எலுமிச்சை ஜூஸ், மோர் போன்ற ஜூஸ்கள் அருந்த வேண்டும், முதியோர்களின் உடல் நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் வழங்கியுள்ளார். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு SHARE பண்ணுங்க..

Similar News

News July 7, 2025

திருவாரூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை

image

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே ஓட்டக்குடி பகுதியில் வசிப்பவர் சுஜாதா (33). இவரது கணவர் பிரபாகரன் துபாயில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி செல்போன் வாயிலாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சுஜாதா சம்பவத்தன்று உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டதில் நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News July 7, 2025

திருவாரூரில் ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 6, 2025

திருவாரூர்: கழிவறை கட்ட ரூ.12,000 ஊக்கத் தொகை

image

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), அனைத்து கிராமப் புற குடும்பங்களுக்கும் கழிவறை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உங்கள் பகுதி ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!