News March 18, 2025

கொடியசைத்து துவக்கி வைத்த ஆட்சியர்

image

 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக வழங்கப்படும் அரசு நலத்திட்டங்களை மாவட்ட அளவில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் தெருமுனை நாடகங்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்பணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

Similar News

News August 15, 2025

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் டீன் பதவியேற்பு

image

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி டீனாக பணியாற்றி வந்த டாக்டர் எம்.பூவதி தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி டீனாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் கே.சத்யபாமா கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி டீனாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

News August 15, 2025

கிருஷ்ணகிரி: பத்திரம் தொலைந்தால் கவலை வேண்டாம்

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த லிங்க் மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் <>இதில் <<>>பெற முடியும். மேலும் தகவல்களுக்கு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை (04343-235233) அழைக்கலாம். *அனைவருக்கும் பகிரவும்*

News August 15, 2025

மதிய உணவு உண்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

image

ஒசூரை அடுத்த பேரிகை அருகே உள்ள காட்டிநாயக்கன்தொட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இப்பள்ளியில் நேற்று (ஆக.14) பரிமாறிய மதிய உணவில் பல்லி இருந்ததைக் கண்டு மாணவா்கள் அதிா்ச்சியடைந்தனர். அதற்குள், மதிய உணவு உண்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. 20 மாணவர்கள் பேரிக்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

error: Content is protected !!