News March 18, 2025
மொத்த விலை பணவீக்கம் உயர்வு

நாட்டின் மொத்த விலை பணவீக்கம், பிப்ரவரி மாதத்தில் 2.38% ஆக உயர்ந்துள்ளதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது, கடந்த ஜனவரி மாதத்தில் 2.31% ஆகவும், கடந்தாண்டு பிப்ரவரியில் 0.20% ஆகவும் இருந்தது. சமையல் எண்ணெய், குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்ந்ததே, பணவீக்கம் அதிகரிக்க முக்கிய காரணமாக இருந்தது. சமையல் எண்ணெய் 33.59%, குளிர்பானங்கள் 1.66% ஆகவும் உயர்ந்துள்ளன.
Similar News
News July 7, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜூலை 7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News July 7, 2025
செம்மணி புதைகுழியில் 47 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

1994-ல் போரின்போது இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதாக கூறப்படும் தமிழர்கள் எலும்புகள், உடல் எச்சங்கள் யாழ்ப்பாணம்- அரியாலை – சிந்துப்பாத்தி பகுதிகளில் அகழாய்வுப் பணியின்போது கண்டெடுக்கப்பட்டது. அந்த வகையில், செம்மணி புதைகுழியில் இதுவரை 47 பேரின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடைசியாக 2 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 7, 2025
கல்லூரிகளில் இசை வெளியீடு: சசிகுமார் அதிருப்தி

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘பிரீடம்’. சத்யசிவா இயக்கிய இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இசை வெளியீட்டு விழாவில் பேசிய சசிகுமார் கல்வி நிறுவன வளாகங்களில் என்னுடைய படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடத்துவதில் உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளார். கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படத்தை பார்க்க அழைப்பதில் தனக்கு விருப்பம் இல்லை எனவும் கூறியுள்ளார்.